Tuesday 11 October 2016

கீரைகளும், நன்மைகளும்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் 🍈
""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த🌺
""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் 🌿
""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும்
🌿""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும்
🍂""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும்
🍊""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும்
🌱""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும்
🍈"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
🌿""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க
🍈"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""துளசி.""
16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு
🌿""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும்
🌿""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும்
🍒"" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
🍍"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
🌾(முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""
25) முகம் அழகுபெற
🍇""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும்
🍃"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும்
🌱“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு

Saturday 4 June 2016

நாட்டுக்கோழி வளர்ப்பு


நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்:
ஆண், பெண் கோழி விகிதாச்சாரம்:
நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.
முட்டைகளை சேகரிக்கும் காலம்:
கோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளை, முட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
அடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்:
பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.
மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.
எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில் கோழியை உட்காரவைத்து பெறப்படும் குஞ்சுகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இயற்கை முறை அடைகாத்தலில் அடைக்கோழிகளை அடைகாத்தலுக்கு பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் காலமும் முட்டை குஞ்சு பொரிப்புத்திறன் அதிகரிக்க காரணமாக உள்ளது.
அடைக்கோழியின் உடல்நலன்:
பேண், செல் பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை 2 மிலி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் விடவேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் பேண், செல் பாதிப்பினால் ஏற்படும் அரிப்பு, நமச்சல் குறைந்து நல்ல நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.
கருக்கூடிய முட்டையைக் கண்டறிதல்:
நாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7 நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்பு, ஒரு அட்டை. கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டை போகும் அளவிற்கு ஓட்டை போட்டு முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைத்து கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும், ரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும். கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோ, ரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும். எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.

நாட்டுகோழி பண்ணை

ஒரே ஒரு பெட்டை நாட்டுக்கோழியின் மூலம் கிடைக்கும் வருமானம்.
சராசரியாக ஒரு பெட்டை நாட்டுக்கோழி
ஒரு வருடத்தில் இடும் முட்டைகளின் எண்ணிக்கை = 60
முட்டைகளின் பொரிப்புத்திறன் = 75%
# 60 முட்டைகளிருந்து கிடைக்கும்
குஞ்சுகளின் எண்ணிக்கை (60X75%) = 45 குஞ்சுகள்
இறப்பு விகிதம் = 5 %
# 45 குஞ்சுகள் x 5% இறப்பு = 2.25 (Rounded) = 3 குஞ்சுகள்
45 குஞ்சுகள் - 3 குஞ்சுகள் = 42 குஞ்சுகள்
ஒரு குஞ்சுக்கான மாதந்திர தீவன செலவு ரூ 30.00
4 மாதத்திற்கான தீவன செலவு (ரூ 30.00 x 4) = 120.00
# 42 குஞ்சுகளுக்கு 4 மாதத்திற்கான
தீவன செலவு (ரூ 120.00 x 42 ) = ரூ 5040.00
ஒரு பெட்டைகோழி மற்றும் ஒரு சேவலுக்கான
மாதாந்திர தீவன செலவு = ரூ 60
பெட்டைகோழி மற்றும் சேவலுக்கான
ஓராண்டு தீவன செலவு (ரூ 60 x 12 மாதம்) = ரூ 720.00
ஒரு குஞ்சுக்கான மருத்துவ செலவு ரூ 10/- வீதம்
42 குஞ்சுகளுக்கான மருத்துவ செலவு = ரூ 420.00
பெட்டைக்கோழி மற்றும் சேவலுக்கான
ஓராண்டு மருத்துவ செலவு = ரூ 250.00
-----------------------
மொத்த செலவு = ரூ 6430.00
----------------------
4 மாத காலத்தில் ஒரு குஞ்சுவின் எடை = 1.250 Kg
# 42 குஞ்சுகள்X 1.250 Kg = 52.50 Kg
உயிர் எடை 1 kg ரூ 250.00 வீதம் 52.50 Kg க்கு = ரூ 13,125.00
மொத்த செலவு = ரூ 6,430.00
------------------------
மீதம் = ரூ 6695.00
# ஒரு பெட்டைக்கோழி மூலம் ஓராண்டில் கிடைக்கும் நிகர வருமானம் = ரூ 6695.00
ஒருவர் 100 பெட்டைக்கோழிகளுக்கு 20 சேவல்கள் வீதம் கோழிகள் தங்குவதறகான கொட்டகைக்கு ஒரு பகுதி கோழிகள் உலாவுவதற்கு ஒரு பகுதி அசோலா வளர்ப்பிற்கு ஒரு பகுதி, என திட்டமிட்டு பண்ணையை அமைத்து நாளொன்றுக்கு காலையில் மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் செலவிட்டு பராமரித்து வந்தால் சராசரியாக ஓராண்டில் அவருக்கு கிடைக்கும் நிகர லாபம் 6,50,000.00 ரூபாயாகும். இது அறிவியல் ரீதியான உண்மை என்பதோடு இன்றைக்கு பலராலும் நிரூபிக்கப்பட்டு கொண்டிருக்கும் உண்மையாகும்

Monday 30 May 2016

‘‘தேமோர்க் கரைசல் தயாரிப்பது எப்படி?

‘‘தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாக பூக்கும். இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைப் பயிர் வளர்ச்சி ஊக்கியாகத்தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இது வைரஸ் கிருமிகளால் வருகின்ற நோய்களையும் கட்டுப்படுத்துகின்றது. 5 லிட்டர் புளித்த மோர், 5 லிட்டர் தேங்காய்ப் பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.
ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் பத்து லிட்டர் தண்ணீரில் 500 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்

Thursday 26 May 2016

தமிழ்நாட்டின் கால்நடை சந்தைகள்

வ.எண்-- மாவட்டம்-- தாலுக்கா--சந்தை கூடும் இடம்--சந்தை நாள் 
1-- கோயமுத்தூர்-- அவினாசி--அவினாசி--ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25) 
2-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (வடக்கு)--துடியலூர்--திங்கள்
3-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (தெற்கு)--பூளூவபட்டி--வெள்ளி
4-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--காரமடை--ஆண்டுதோறும் (பிப்ரவரி 11-22)
5-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--மேட்டுப்பாளையம்---
6-- கோயமுத்தூர்-- பல்லடம்--பல்லடம்--திங்கள்
7-- கோயமுத்தூர்-- பொள்ளாச்சி--பொள்ளாச்சி--வியாழன்
8-- கோயமுத்தூர்-- திருப்பூர்--பெரமநல்லூர்--சனி
9-- கோயமுத்தூர்-- திருப்பூர்--மங்கலம்--சனி
10-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--பூலவாடி--வெள்ளி
11-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--உடுமலைபேட்டை--திங்கள்
12-- கோயமுத்தூர்-- அவினாசி--அன்னூர்---
13-- கூடலூர்-- ---சின்னசேலம்--வியாழன்
14-- கூடலூர்-- ---குள்ளஞ்சவாடி--ஞாயிறு
15-- கூடலூர்-- ---மூங்கில்துரைப்பட்டு--ஞாயிறு
16-- கூடலூர்-- ---தியாகதுர்கம்--சனி
17-- கூடலூர்-- சிதம்பரம்--சேத்தியாதோப்பு--புதன்
18-- கூடலூர்-- சிதம்பரம்--புவனகிரி--புதன்
19-- கூடலூர்-- கூடலூர்--காரமணிக்குப்பம்--திங்கள்
20-- கூடலூர்-- கட்டுமனனார்கோவில்--லால்பேட்டை--செவ்வாய்
21-- கூடலூர்-- திட்டகுடி--திட்டகுடி--புதன்
22-- கூடலூர்-- விருதாச்சலம்--வேப்பூர்--வெள்ளி
23-- கூடலூர்-- விருதாச்சலம்--விருதாச்சலம்--வியாழன்
24-- கூடலூர்-- விருதாச்சலம்--அத்தியூர்--செவ்வாய்
25-- தர்மபுரி-- --- பல்லாபள்ளி--திங்கள்
26-- தர்மபுரி-- ---பெட்டாரைய சுவாமி--ஆண்டு தோறும் 13-16)
27-- தர்மபுரி-- ---குடிச்செட்லு--ஆண்டு தோறும் (பிப்ரவரி 23-25)
28-- தர்மபுரி-- ---பாத்தகோட்டா--ஆண்டு தோறும் 4 நாட்கள்
29-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--கீழமங்கலம்--ஞாயிறு
30-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--மடகோண்டப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி 18-20)
31-- தர்மபுரி-- தர்மபுரி--நல்லாம்பள்ளி--செவ்வாய்
32-- தர்மபுரி-- ஹரூர்--கோபிநாத்தம்பட்டி--புதன்
33-- தர்மபுரி-- ஹரூர்--கம்பியநல்லூர்--வெள்ளி
34-- தர்மபுரி-- ஒசூர்--பாகலூர்--வியாழன்
35-- தர்மபுரி-- ஒசூர்--ஒசூர்--புதன்
36-- தர்மபுரி-- ஒசூர்--சப்பரப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி- மார்ச்)
37-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--ஒரப்பம்--புதன்
38-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--குண்டரப்பள்ளி--வெள்ளி
39-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--காவேரிப்பட்டினம்--சனி
40-- தர்மபுரி-- பாலக்கோடு--கரிமங்கலம்--செவ்வாய்
41-- தர்மபுரி-- பப்பிரேடிப்பட்டி--கடத்தூர்--ஞாயிறு
42-- தர்மபுரி-- போச்சம்பள்ளி--போச்சம்பள்ளி--ஞாயிறு
43-- தர்மபுரி-- உத்தன்கரை--சிங்காரப்பேட்டை--திங்கள்
44-- தர்மபுரி-- உத்தன்கரை--உத்தன்கரை--திங்கள்
45-- திண்டுக்கல்-- ---நரிக்கால்பட்டி--வியாழன்
46-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--அம்மாப்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)
47-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--ஆத்தூர்--வெள்ளி
48-- திண்டுக்கல்-- நிலக்கோட்டை--நிலக்கோட்டை--சனி
49-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--எஸ்.ஆத்திக்கோம்மை--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)
50-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--விருப்பாச்சி--வியாழன்
51-- திண்டுக்கல்-- பழனி--தொப்பம்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 10)
52-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடமதுரை--ஞாயிறு
53-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடசுந்தர்--ஞாயிறு
54-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--கலவர்ப்பட்டி--ஞாயிறு
55-- ஈரோடு-- ---கன்னபுரம்--ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரம்
56-- ஈரோடு-- ---சலிப்புதூர்--திங்கள்
57-- ஈரோடு-- பவானி--அந்தியூர்--திங்கள்
58-- ஈரோடு-- பவானி--குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவரி--ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-15
59-- ஈரோடு-- பவானி--வெள்ளித்திருப்பூர்--ஆண்டு தோறும் மே
60-- ஈரோடு-- தாராபுரம்--தாராஊரன்--வியாழன்
61-- ஈரோடு-- தாராபுரம்--கன்னிவாடி--வெள்ளி
62-- ஈரோடு-- தாராபுரம்--குண்டடம்--சனி
63-- ஈரோடு-- தாராபுரம்--முலனூர். ஆர்.எஸ்.--புதன்
64-- ஈரோடு-- ஈரோடு--முனிசிபல் காலனி--தினசரி சந்தை
65-- ஈரோடு-- ஈரோடு--சிவகிரி--வெள்ளி
66-- ஈரோடு-- ஈரோடு--ஈரோடு--திங்கள்
67-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--மொடச்சூர்--வியாழன்
68-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--சிறுவலூர்--செவ்வாய்
69-- ஈரோடு-- காங்கயம்--முத்தூர்--சனி
70-- ஈரோடு-- காங்கயம்--நத்தக்கடையூர்--புதன்
71-- ஈரோடு-- காங்கயம்--காங்கேயம்--திங்கள்
72-- ஈரோடு-- பெருந்துறை--வலயப்பாளையம்---
73-- ஈரோடு-- பெருந்துறை--பெருந்துறை--ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம்
74-- ஈரோடு-- பெருந்துறை--குன்னத்தூர்--ஞாயிறு
75-- ஈரோடு-- சத்தியமங்கலம்--புஞ்சைபுயிளம்பட்டி--வியாழன்
76-- காஞ்சிபுரம்-- ---வலஜாபேட்டை--திங்கள்
77-- காஞ்சிபுரம்-- செய்யாறு--அணைக்கட்டு--வெள்ளி
78-- காஞ்சிபுரம்-- மதுரான்தகம்--அச்சரபாக்கம்--ஞாயிறு
79-- காஞ்சிபுரம்-- தாம்பரம்--பல்லாவரம்--வெள்ளி
80-- காஞ்சிபுரம்-- திருக்கல்குன்றம்--திருக்கழுக்குன்றம்--வியாழன்
81-- காஞ்சிபுரம்-- உத்திரமேரூர்--மனம்பதி--வியாழன்
82-- கன்னியாகுமரி-- ---மார்த்தாண்டம்--செவ்வாய்
83-- கன்னியாகுமரி-- ---திங்கள் சந்தை--திங்கள்
84-- மதுரை-- ---செக்கனூரனி---
85-- மதுரை-- மதுரை (வடக்கு)--வீரபாண்டி--வருடாந்திரம் 8 நாட்கள்
86-- மதுரை-- மதுரை (தெற்கு)--திருப்பரங்குன்றம்--வெள்ளி
87-- நாகப்பட்டினம்-- ---செம்பகராயநல்லூர்--சனி
88-- நாகப்பட்டினம்-- ---திருத்துறைப்பூண்டி--வெள்ளி
89-- நாகப்பட்டினம்-- சீர்காழி--கொல்லிடம்--திங்கள்
90-- நாமக்கல்-- ---கொங்கனபுரம்--சனி
91-- நாமக்கல்-- ---மோர்பாளையம்--வெள்ளி
92-- நாமக்கல்-- நாமக்கல்--புதன்சந்தை--புதன்
93-- நாமக்கல்-- ராசிபுரம்--முத்துக்கள்ளிப்பட்டி--தைபூசம் (ஆண்டு தோறும் 10 நாட்கள்)
94-- நாமக்கல்-- திருச்செங்கோடு--எடப்பாடி--புதன்
95-- நாமக்கல்-- திருச்செங்கோடு--பள்ளக்காபாளையம்--திங்கள்
96-- பெரம்பலூர்-- ---மீன்சுருட்டி--ஞாயிறு
97-- பெரம்பலூர்-- அரியலூர்--அரியலூர்--ஞாயிறு
98-- பெரம்பலூர்-- உடையார்பாளையம்--உடையார்பாளையம்--சனி
99-- புதுக்கோட்டை-- ஆழங்குடி--ஆலங்குடி--வியாழன்
100-- புதுக்கோட்டை-- அரந்தாங்கி--அறந்தாங்கி--செவ்வாய்
101-- புதுக்கோட்டை-- மனமேல்குடி--மனமேல்குடி--ஞாயிறு
102-- புதுக்கோட்டை-- புதுக்கோட்டை--புதுக்கோட்டை--வெள்ளி
103-- புதுக்கோட்டை-- திருமயம்--பொன்னமரவாதிக்கரையூர்--திங்கள்
104-- இராமநாதபுரம்-- பரமக்குடி--பரமக்குடி--வியாழன்
105-- சேலம்-- ---செட்டிப்பட்டி---
106-- சேலம்-- ---சின்னப்பம்பட்டி--ஞாயிறு
107-- சேலம்-- ---சின்னதிருப்பதி--சனி
108-- சேலம்-- ---மீனம்பள்ளி---
109-- சேலம்-- ---முத்துநாயக்கண்பட்டி--வெள்ளி
110-- சேலம்-- ---சேவாபேட்டை--செவ்வாய்
111-- சேலம்-- ஆத்தூர்--ஆத்தூர்--ஞாயிறு
112-- சேலம்-- ஆத்தூர்--பொத்தநாயக்கன்பாளையம்--வியாழன்
113-- சேலம்-- எடபாடி--எடப்பாடி---
114-- சேலம்-- கங்காவல்லி--வீரகனூர்---
115-- சேலம்-- மேட்டூர்--மேச்சேரி--புதன்
116-- சேலம்-- மேட்டூர்--கொளத்தூர்--வெள்ளி
117-- சேலம்-- மேட்டூர்--நங்கவள்ளி---
118-- சேலம்-- ஓமலூர்--ஓமலூர்--சனி
119-- சேலம்-- ஓமலூர்--தாரமங்கலம்--வியாழன்
120-- சேலம்-- சேலம்--பனமரத்துப்பட்டி--திங்கள்
121-- சேலம்-- சேலம்--பாப்பாரபட்டி---
122-- சேலம்-- சங்ககிரி--மெக்.டொனால்ட் செளத்ரி--ஆண்டு தோறும் - அக்டோபர்
123-- சேலம்-- வாலப்பாடி--அயோத்தியாப்பட்டணம்--திங்கள்
124-- சேலம்-- வாலப்பாடி--பேலூர்--திங்கள்
125-- சிவகங்கை-- தேவகோட்டை--தேவகோட்டை--ஞாயிறு
126-- சிவகங்கை-- மானாமதுரை--மானாமதுரை--வெள்ளி
127-- சிவகங்கை-- மானாமதுரை--திருப்புவனம்--புதன்
128-- சிவகங்கை-- சிவகங்கா--சிவகங்கை--புதன்
129-- தஞ்சாவூர்-- ---மொடுக்கூர்--ஞாயிறு
130-- தஞ்சாவூர்-- கும்பகோணம்--நீரத்தநல்லூர்--வருடம் - ஏப்ரல் 20 நாட்கள்
131-- தஞ்சாவூர்-- ஒரத்தநாடு--திருவோணம்--ஞாயிறு
132-- தஞ்சாவூர்-- பட்டுக்கோட்டை--பட்டுக்கோட்டை--திங்கள்
133-- தஞ்சாவூர்-- பேரவூரணி--பேராவூரணி--செவ்வாய்
134-- தஞ்சாவூர்-- திருயைாறு--திருக்காட்டுப்பள்ளி--வியாழன்
135-- தேனி-- ஆண்டிப்பட்டி--உசிலம்பட்டி---
136-- தேனி-- பெரியகுளம்--டி.வாடிப்பட்டி---
137-- திருவள்ளூர்-- ---திருவோட்டியூர்---
138-- திருவள்ளூர்-- ---நெல்வாய்--புதன்
139-- திருவள்ளூர்-- உத்துக்கோட்டை--உத்துக்கோட்டை--தினசரி சந்தை
140-- திருவண்ணாமலை-- ---அம்மாபாளையம்--திங்கள்
141-- திருவண்ணாமலை-- ---பழகையூர்--வெள்ளி
142-- திருவண்ணாமலை-- ---நாச்சியார்கோவில்--செவ்வாய்
143-- திருவண்ணாமலை-- ---தெப்பநாண்டால்--சனி
144-- திருவண்ணாமலை-- ஆரணி--ஒன்னுபுரம்--வியாழன்
145-- திருவண்ணாமலை-- ஆரணி--ஆரணி--ஞாயிறு
146-- திருவண்ணாமலை-- ஆரணி--தேவிகாபுரம்--திங்கள்
147-- திருவண்ணாமலை-- சேன்கம்--செங்கம்--புதன்
148-- திருவண்ணாமலை-- சேன்கம்--தண்டாரம்பேட்டை--சனி
149-- திருவண்ணாமலை-- செய்யாறு--செய்யாறு--ஞாயறு
150-- திருவண்ணாமலை-- செய்யாறு--கொறுக்காதூர்--திங்கள்
151-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--மல்லவாடி--ஞாயிறு
152-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--திருவண்ணாமலை--புதன்
153-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--தன்டாரை--புதன்
154-- திருவண்ணாமலை-- வந்தவாசி--தெல்லார்--ஞாயறு
155-- திருவண்ணாமலை-- வந்தவாசி--பெரனமல்லூர்--திங்கள்
156-- திருவண்ணாமலை-- வந்தவாசி--மருதாடு--புதன்
157-- திருவாரூர்-- மன்னார்குடி--மன்னார்குடி--செவ்வாய்
158-- திருவாரூர்-- திருத்துறைப்பூண்டி--முத்துப்பேட்டை--புதன்
159-- திருநெல்வேலி-- ---எட்டையபுரம்--சனி
160-- திருநெல்வேலி-- ---கழுகுமலை--செவ்வாய்
161-- திருநெல்வேலி-- ---கயத்தாறு--வியாழன்
162-- திருநெல்வேலி-- ---மேலப்பாளையம்--வியாழன்
163-- திருநெல்வேலி-- ---நாகலாபுரம்--வியாழன்
164-- திருநெல்வேலி-- ---பாம்புகோயில்---
165-- திருநெல்வேலி-- ---புடியம்புத்தூர்--புதன்
166-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--பாப்பாகுடி--ஞாயிறு
167-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--முக்கூடல்--வெள்ளி
168-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--கடயம்--திங்கள்
169-- திருநெல்வேலி-- நங்குநேரி--நங்குநேரி--ஞாயிறு
170-- திருநெல்வேலி-- பாளையம்கோட்டை--வி.ரெட்டியார்பட்டி---
171-- திருநெல்வேலி-- பாலட்நஜிட்டு--சீவலபேரி--வருடம்(ஆகஸ்ட்-செப்டம்பர்) (14-30)
172-- திருநெல்வேலி-- ராதாபுரம்--வள்ளியூர்---
173-- திருநெல்வேலி-- ராதாபுரம்--திசயன்வில்லை---
174-- திருநெல்வேலி-- சங்கரன்கோவில்--திருவேங்கடம்---
175-- திருநெல்வேலி-- சிவகிரி--இனம்கோவில்பட்டி--திங்கள்
176-- திருநெல்வேலி-- தென்காசி--நைனார் அகரம்---
177-- திருநெல்வேலி-- தென்காசி--பாவூர்சத்திரம்---
178-- திருச்சிராப்பள்ளி-- ---உப்பிடமங்கலம்--ஞாயிறு
179-- தூத்துக்குடி-- ---மைனர் அக்ரஹாரம்--சனி
180-- வேலூர்-- ---காமதிலி--சனி
181-- வேலூர்-- ---ராணிபேட்டை--வெள்ளி
182-- வேலூர்-- ---விம்மியம்பதி--வியாழன்
183-- வேலூர்-- அரக்கோணம்--நெமிலி--திங்கள்
184-- வேலூர்-- காட்பாடி--சோலிங்கர்--புதன்
185-- வேலூர்-- திருப்பத்தூர்--நாட்ராம்பள்ளி--திங்கள்
186-- வேலூர்-- திருப்பத்தூர்--ஜோலார்பேட்டை--புதன்
187-- வேலூர்-- வானியம்பாடி--வானியம்பாடி--சனி
188-- வேலூர்-- வேலூர்--ஒடுக்கத்தூர்--வெள்ளி
189-- வேலூர்-- வேலூர்--பொய்கை--வியாழன்
190-- வேலூர்-- வேலூர்--ஆம்பூர்--வெள்ளி
191-- விழுப்புரம்-- ---செட்டிபாளையம்--வெள்ளி
192-- விழுப்புரம்-- ஜின்ஜீ--ஆல்வார்பேட்டை--ஞாயிறு
193-- விழுப்புரம்-- ஜின்ஜீ--மேலோகடகூர்--செவ்வாய்
194-- விழுப்புரம்-- ஜின்ஜீ--வாலதி--ஞாயிறு
195-- விழுப்புரம்-- திண்டிவனம்--கோட்டேரிபட்டை--ஞாயிறு
196-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--கண்டச்சிபுரம்--சனி
197-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--முகையூர்--வியாழன்
198-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--தீவனூர்--வெள்ளி
199-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--வீரபாண்டி--வியாழன்
200-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--திருக்கோயிலூர்--செவ்வாய்
201-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--மணலூர்பேட்டை--சனி
202-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--உளுந்தூர்பேட்டை---
203-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--மடப்பட்டு--ஞாயிறு
204-- விழுப்புரம்-- விழுப்புரம்--செங்கீதமங்கலம்--ஞாயிறு
205-- விழுப்புரம்-- விழுப்புரம்--பிரம்மதேசம்--புதன்
206-- விருதுநகர்-- ---கன்னிசேரிபுதூர்--ஆண்டு தோறும் - மே-ஜீன் 15 நாட்கள்
207-- விருதுநகர்-- கரியப்பட்டை--காரியாபட்டி--சனி
208-- விருதுநகர்-- கரியப்பட்டை--தொனுக்கள்--வியாழன்
209-- விருதுநகர்-- ராஜபாளையம்--இராஜபாளையம்--வியாழன்
210-- விருதுநகர்-- திருச்சுழி--வீரசோழம்--திங்கள்

தீவனச் செலவுகளை குறைக்கும் முறைகள் :

கால்நடை வளர்ப்பு வேளாண்மையுடன் இணைந்த உப தொழிலாக உள்ளது. எனவே, விவசாயிகள் பசுக்களை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பசுந்தீவனத்துக்கு அதிக அளவில் விவசாயிகள் செலவிடும் நிலையில், தீவனச் செலவுகளை பல முறைகளில் குறைக்க வாய்ப்புண்டு. இந்த முறைகளைப் பயன்படுத்தினால், தீவனச் செலவு பெருமளவு குறையும்.
கால்நடைகள் வேளாண்மை உற்பத்திக்கு பல வகைகளில் உதவியும் புரிகிறது. விவசாயிகளின் நிரந்தர வருமானத்துக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யவும் ஆதாரமாக உள்ளது.
இருப்பினும், கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தின் அளவில் சுமார் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் கால்நடைகளின் முழு உற்பத்தித் திறனை பெற இயலவில்லை என கால்நடை மருத்துவர் க.சங்கர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
• விவசாயிகள் பேணி காக்கும் கலப்பின கால்நடைகளுக்கு சமச்சீரான சத்துள்ள தீவனத்தை ஆண்டு முழுவதும் கொடுக்க வேண்டியுள்ளது. கால்நடைகளின் பராமரிப்பில் 60-70 சதவீதம் தீவனச் செலவாக உள்ளது. இதை குறைப்பதற்கு உகந்த வழி தீவனப் பயிர்களை வளர்த்து அவைகளுக்கு உரிய அளவில் கொடுப்பதாகும்.
• மக்காச்சோளம், சோளம், தீவனக்கம்பு ஆகிய தானிய வகைகளும், கினியாப்புல், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ.3) எருமைப்புல், கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல் ஆகிய புல் வகைகளும், முயல் மசால், வேலி மசால், தீவன தட்டைப்பயறு, ஆட்டு மசால், சங்குப்பூ ஆகிய பயறு வகைகளும், சூபாபுல், கிளிரிசீடியா, வாகை, வேம்பு, அகத்தி ஆகிய மர வகைகளும் என 4 வகைகளாக தீவனங்கள் அளிக்கப்படுகின்றன.
• எல்லா மண் வகைகளிலும் மழையளவு மற்றும் பாசன வசதி குறைவாக உள்ள இடங்களிலும் தீவன மரங்களை வரப்புகளிலும், தோட்டங்களின் வேலி ஒரங்களிலும் தீவனங்களைப் பயிரிடலாம்.
• தானிய வகை, புல் வகை, பயறு வகை தீவனப்பயிர்களை ஊடு பயிர் முறையில் பயிர்செய்வதன் மூலம் கால்நடைகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
வறட்சியில் தீவனப் பராமரிப்பு:
• வறட்சியின்போது தீவனப் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதால், பெரும்பாலான கால்நடைகள் விற்கப்படுகின்றன. எனவே, அந்தக் காலக்கட்டத்தில் உடைத்த இருங்குச்சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றை மக்காச் சோளத்துக்குப் பதிலாக 50 சதவீதம் வரை தீவனத்தில் அளிக்கலாம்.
• அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, அரிசிக்குருணை, உளுந்து, பயறு, கடலை பொட்டு போன்றவற்றை கால்நடை தீவனத்தில் 50 சதவீதம் வரை சேர்க்கலாம். விலை மலிவாக கிடைக்கும் தானிய உபபொருள்களை தீவனத்தில் கலப்பதால் தீவனச்செலவு மிச்சமாவதுடன் சத்துள்ள ஆகாரம் கிடைக்கிறது.
வேளாண் கழிவுப் பொருள்களையும் அளிக்கலாம்!
• கிழங்கு திப்பி, பருத்திக்கொட்டை, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகியவற்றை உடைத்து தீவனத்தில் சேர்க்கலாம்.
• அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், சோளத்தட்டை, கம்புத்தட்டை, வேர்கடலைக்கொடி, காய்ந்த புல், சூரியகாந்தி செடி, மக்காச்சோளத்தட்டை, கேழ்வரகுத் தட்டை ஆகிய கூளத் தீவனத்தையும் கொடுக்கலாம்.
• சத்துகள் குறைந்த இந்த உலர் தீவனங்களை 4 யூரியா கரைசல் தெளித்து சில நாள்கள் காற்றுப் புகாமல் பாதுகாத்து வைப்பதன் மூலம் சத்துள்ள கூளத் தீவனம் கால்நடைகளுக்கு கிடைக்கும். யூரியாவைக் கொண்டு ஊட்டமேற்றிய தீவனத்தை ஆறு மாத வயதைக் கடந்த மாட்டிற்கு 4-5 கிலோ வரை அளிக்கலாம்.
• ஆடுகளுக்கு சோளத்தட்டையுடன் காய்ந்த உளுந்தஞ்செடி, துவரைச் செடி, நிலக்கடலைக் கொடி, சவுண்டல், கிளிரிசிடியா, மர இலைகள், கொடுக்காப்புளி, கருவேல் ஆகியன நல்ல உணவாகின்றன. காய்ந்த பயறுவகை தீவனமும் சாலச்சிறந்ததாகும்.
கரும்புச் சோகை, சக்கைகளும் நல்ல உணவு:
• கரும்புச்சோகை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. தினசரி 20 – 25 கிலோ வரை அளிக்கலாம்.
• சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்திப் பூ ஆகியவற்றை உணவாக வைக்கலாம்.
கருவேல், வேலிக்கருவேல், சவுண்டல் விதைகள், புளியங்கொட்டை, மாங்கொட்டை ஆகியவற்றை தீவனமாகப் பயன்படுத்தலாம். விதைகளை 20 -30 சதவீதம் வரை தீவனத்தில் சேர்க்கலாம்.
மர இலைகள்:
• மர இலைகள் சத்துள்ள தீவனமாக அமைந்துள்ளது. அகத்தி, சவுண்டல், கிளிரிசிடியா, கொடுக்காப்புள்ளி, வாகை ஆகியவற்றின் இலைகளில் புரத சத்து அதிகமாக உள்ளது.
• அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் விச சத்து அற்ற கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலைகளை கோடை காலத்தில் அளித்து தீவனப்பற்றாக்குறையை போக்கலாம்.
• மர இலைகளுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கேழ்வரகு தட்டை போன்றவற்றையும் கோதுமைத்தட்டையும் சேர்த்து அளிக்க வேண்டும். மர இலைகளை பால் தரும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 10-15 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு 3 – 3.5 கிலோ வரை ஒரு நாளைக்கு கொடுக்கலாம். மேலும் மர இலைகளையும் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
• மர இலைகளை தீவனமாக அளிக்கும் போது கீழ்க்கணட வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
• மர இலைகளை பிற புல், உலர்ந்த தீவனத்துடன் சிறிது சிறிதாக அளிக்க வேண்டும். மர இலைகளை உலரவைத்து அதன் ஈரப்பதம் 15 -20 கீழே உள்ள நிலைகளில் அளிப்பது சிறந்தது. மர இலைகள் மீது 2 உப்பு அல்லது வெல்லக் கரைசலை தெளித்தால் உண்ணும் திறன் அதிகமாகும். மர இலைகளை விரும்பு உண்ணாத கால்நடைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளின் அருகில் கட்டி வைத்து மர இலைகளை தீவனமாக அளிக்கலாம்.
முக்கியமான கவனிக்க வேண்டியது :
• மாலை, இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும். வெயில் நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.
• சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.
• விஷ சத்துள்ள தீவனப் பயிர்களை கால்நடைகளுக்கு கொடுக்கக் கூடாது.
• தீவனத் தட்டைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிப்பதால் கழிவுகள் குறையும்.
• மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக் கூடாது. இளம் சோளப்பயிரில் உள்ள சைனிக் அமிலம் நச்சுத்தன்மை உடையதால் இதனை உண்ணும் கால்நடை இறக்க நேரிடும்.
• முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் அளிக்காமல் இரண்டு அல்லது மூன்று தடவை பிரித்து சிறிது சிறிதாக அளித்தல் நல்லது என்றார் சங்கர்.

கவலையில்லாத கால்நடை வளர்ப்பு!

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான் என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால் தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும். இதை எல்லாம் நான் தவறாமல் பிடிப்பதால் தான் என்னுடைய ஆடு, மாடுகள் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக திடக்காத்திரமாக இருந்து எனக்கு இலாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கு என்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன், பசுந்தீவனத்திற்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில் தான் இருக்கிறது. அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.
பத்து ஆண்டுகளுக்கு முன் நூறு ஆடுகளை வைத்திருந்தேன். அதற்காக உருவாக்குனது தான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்தில் தண்ணீர்ப்புல் (எருமைப்புல்) 230 சென்டில் மல்பெரி, அதற்கிடையில் ஊடுபயிராக முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கிறது. வேலி ஓரத்தில் 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வைத்து பத்து பதிணைந்து மாடுகள், கொஞ்சம் ஆடுகள் வளர்க்க முடியும்.
ஆறு வருடத்திற்கு முன்பு வேலையாட்கள் பிரச்சனை வந்ததால், ஐந்தாறு ஆட்டை மட்டும் வைத்துக் கொண்டு மீதத்தை விற்றுவிட்டேன். இப்பொழுது என்னிடம் இரண்டு கறவை மாடுகளும் ஐந்து ஆடுகளும் தான் இருக்கிறது. என் ஆடு, மாடுகளுக்குப் போக மீதமுள்ள தீவனத்தை பக்கத்து விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்தில் மூடாக்காக போட்டு இருக்கேன். அப்படியிருந்தும் மல்பெரி நிறைய இருப்பதால் பட்டுப்புழுவையும் வளர்த்துக் கொண்டிருக்கேன்.
குறைவான செலவு அதிக ஆரோக்கியம்!
கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமாக பயன்படுத்த சொல்கிறார்கள் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள். அதேபோல் நம் அரசு கால்நடைப் பண்ணைகளையும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் தீவனச் செலவு குறைவது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகள் ஆரோக்கியமாக வளர்கிறது. அதனால்தான் நான் தீவனங்களை உருவாக்கிவிட்டு பண்ணைத் தொழிலில் இறங்கினேன். ஆனால் பல இடங்களில் புதிதாக பண்ணை வைக்கிறார்கள். தீவனத்தைப் பயிர் செய்யாமல் பண்ணையை ஆரம்பித்து கடைசியில் தீவனத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாகிவிட்டது. ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம் என்று தான் சொல்வார்கள்.
ஒரு தடவை நட்டா வருடக்கணக்கில் பலன்!
மிகக் குறைவான செலவில் அதிகமான சத்து கிடைக்கிற பசுந்தீவனங்களை விவசயிகளே உற்பத்தி செய்து லாபம் சம்பாதிக்க முடியும். கொஞ்சமாக நிலம் இருந்தால் கூட போதும். ஒரு தடவை விதைத்துவிட்டாலே நிறைய வருடங்களுக்கு விளைச்சல் இருக்கிற தீவனப் பயிர்களும் கூட இருக்கிறது.
இந்த தண்ணீர்புல், முயல்மசால், வேலிமசால், கலப்பை கோணியம், சங்குப்புஷ்பம், மல்பெரி, சூபாபுல், எல்லாமே போட்டு பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எந்தப் பராமரிப்பும் கிடையாது. அறுப்பது மட்டும்தான் வேலை. முழுக்க இயற்கை விவசாயம் தான். ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லியையே தொடுவதே கிடையாது. என்னுடைய இரண்டு மாடு, ஐந்து ஆடுகளுடைய கழிவுகள்தான் இதுக்கு உரம். இவைகளைச் சாப்பிட்டுத்தான் என்னுடைய ஆடு, மாடுகள் திடகாத்திராக இருக்கிறது.
பசுந்தீவனத்தால் கெட்டியான பால்!
ஒரு கறவை மாட்டிற்கு தினம் பசுந்தீவனம் - 20 கிலோ, வைக்கோல் – 10 கிலோ, அசோலா – 5 கிலோ, தவிடு – 3 கிலோ, கடலைப்பிண்ணாக்கு – அரை கிலோ கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மாடு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்குது. நல்லா கொழகொழ என்று தரமாக பால் இருக்கிறது. பசுந்தீவனம் நிறைய சாப்பிடுவதால் உரிய காலத்தில் சினை பிடித்துவிடுகிறது.
தினமும் ஒரு ஆட்டிற்கு 5 கிலோ பசுந்தீவனம் கொடுக்கிறேன். பசுந்தீவனத்திற்கு ஆரம்பக் கட்ட செலவு மட்டும்தான். வேறு செலவே இல்லை. ஆனால் கடைகளில் வெ்வளவு வாங்கிப் போட்டாலும், செலவுதான் அதிகம், பால் அளவு கூடாது.
20 சென்டில் எருமைப்புல்:
பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் தீவனப் பயிர்கள் நன்கு வளரும். அதனால் மண்ணைப் பற்றிய கவலையில்லை. நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஒட்டி மண்ணை நன்கு பொல பொலப்பாக வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஒட்ட வேண்டும். 20 சென்டில் ஆயிரம் தண்ணீர்ப்புல் விதைக்கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் தண்ணீர் பாய்ச்சி அதிலிருந்து வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
20ம் நாளில் களையெடுத்து 200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் முழுக்க வைத்திருந்து, பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்யலாம்.
90 – ம் நாளிலிருந்து இந்தப் புல்லை அறுவடை செய்யலாம். தரையிலிருந்து நான்கு அடி உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 35 நாட்கள் இந்தப் புல் வளர்ந்தால் தான் முற்றி, அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆகவே, 35 நாட்களுக்கு ஒரு முறைதான் அறுவடை செய்ய வேண்டும். ஒரு அறுவடைக்கு 1,000 கிலோ புல் கிடைக்கும். தேவையைப் பொறுத்து பகுதி பகுதியாகக் கூட அறுவடை செய்யலாம். ஒரு வருடம் கழித்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இடை உழவு செய்தால் புது வேர்கள் விட்டு, அதிக மகசூல் கிடைக்கும்.
230 சசென்டில் மல்பெரி, ஊடுபயிர்களாக வேலிமசால், முயல்மசால், கலப்பைக் கோணியம்:
5 அடி இடைவெளியில், 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு, மேட்டுப்பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் வெளிப்புற இரு ஓரங்களிலும், கரணைக்குக் கரணை மூன்றடி இடைவெளி இருக்குமாறு மல்பெரி விதைக் கரணைகளை நட வேண்டும். கரணையில் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டியது அவசியம். 230 சென்ட் நிலத்திற்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.
வாய்க்கால்களுக்கு இடையில் உள்ள மேட்டுப் பாத்திகளின் மையத்தில் விதைகளை விதைப்பதற்காக அரை அங்குல ஆழத்திற்கு நீளமாக கோடு இழுக்க வேண்டும். ஒரு பாத்தியில் வேலிமசால், இன்னொரு பாத்தியில் முயல்மசால், அடுத்த பாத்தியில் கலப்பைக் கோணியம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா இரண்டு கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடனும் ஆறு கிலோ மணலைக் கலந்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் விதைத்து உயிர்த் தண்ணீர் விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போது 200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை கோமிய சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.
90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்கு தயாராகிவிடும். மல்பெரி, முயல்மசால், வேலிமசால், ஆகியவற்றை அறுவடை செய்யும் போது, தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் தோராயமாக 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் 1 வருடத்தில் வேலிமசால் 400 கிலோவும், முயல்மசால் 300 கிலோவும், கலப்பைக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும்.
உயிர் வேலியாக சவுண்டல்:
வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு, 3 – வது நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவையில்லை. தானாகவே வளர்ந்து விடும். மூன்று மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும்.
பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும்!
சாகுபடி பாடத்தை முடித்து, தொடர்ந்து பேசிய ஆதிநாராயணன், பட்டுப்புழு வளர்ப்பதற்கு மட்டும் தான் மல்பெரி என்று அனைவரும் நினைக்கிறார்கள் ஆனால் அது நல்ல கால்நடைத் தீவனம் என்பது நிறைய இருக்கிறது. இது மாதிரியான பசுந்தீவனங்களை கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும். மாடுகளுக்கு வெறும் அடர் தீவனத்தையும், புல்லையும் மட்டுமே கொடுத்தால் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்காது. அதனால் தான் விவசாயிகள் இடம் விழிப்பு உணர்வு கொடுப்பதற்காக பசுந்தீவன விதைகளையும், விதைக்கரணைகளையும் இலவசமாக கொடுத்து, நேரடி இலவசப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
தொடர்புக்கு:
ஆதிநாராயணன்,
ஆலத்தன்குடிகாடு கிராமம்,
பட்டுக்கோட்டை வழி,
பாப்பா நாடு அருகில்.
அலைபேசி: 98656 - 13616

Wednesday 25 May 2016

நாட்டுக்கம்பு!

மானாவாரியில் மகத்தான விளைச்சல்... நட்டமில்லாத வருமானம் கொடுக்கும் நாட்டுக்கம்பு!
“கிணறு, போர்வெல் என பாசன முறைகள் நவீனமாக மாறினாலும்... பெரும் பகுதி விவசாயம் நடப்பது மானாவாரி நிலங்களில்தான். சோளம், கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை எனப் பல பயிர் ரகங்கள் இருந்தாலும், மானாவாரி விவசாயத்தில் நாட்டுக் கம்புக்கு என்றைக்கும் தனியான இடமுண்டு” என்கிறார், விழுப்புரம் மாவட்டம், தென்பேர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம்.
உயரமாக, கம்பீரமாகக் காட்சி கொடுத்த நாட்டுக்கம்புக் கதிர்களை பெண்கள் அறுவடை செய்துகொண்டிருக்க... அப்பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சுந்தரத்தைச் சந்தித்தோம்.
வெற்றிக்குப் பாடம் சொல்லிய விவசாயிகள்!
“நான் விவசாயத்துக்கு வந்த காலந்தொட்டு கேழ்வரகு, சோளம், கம்புனு சாகுபடி செய்றேன். எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரிங்கிறதால ஆரம்பத்துல அங்க இருந்த நிலத்துல இறவைப் பாசனத்துல வீரிய கம்பு ரகங்களை சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு 20 மூட்டை கம்பு கிடைக்கும். அப்பறம், அங்க இருக்கிற நிலத்தை விற்பனை செய்துட்டு, இங்க வந்து 57 ஏக்கர் நிலம் வாங்கினேன். அதுல, 50 ஏக்கர்ல மா, நெல்லி, சப்போட்டானு பழ மரங்களையும் மர பயன்பாட்டுக்கான மரங்களையும் நடவு செய்திருக்கேன். மீதி 7 ஏக்கர்ல மானாவாரியா விவசாயம் செய்துக்கிட்டிருக்கேன்.
ஆரம்பத்துல இந்த நிலத்துல வீரிய கம்பு ரகங்களைத்தான் சாகுபடி செஞ்சேன். அதுல, விளைச்சல் போதுமான அளவுக்கு இல்லை. அப்பறம் அக்கம்பக்கத்துல இருக்கிற விவசாயிகள்கிட்ட கேட்டப்போ... அவங்க ஆடிப்பட்டத்துல நிலக்கடலை, அல்லது நாட்டுக்கம்பு, கார்த்திகைப் பட்டத்துல காராமணினு சாகுபடி செய்றதா சொன்னாங்க. நானும் அதே மாதிரி சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். குறைந்த செலவு, அதிகமான உழைப்பு இல்லாம போதுமான அளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. அதனாலதான் தொடர்ச்சியா 10 வருஷமா நாட்டுக்கம்பு சாகுபடிய செஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்ற சுந்தரம், வேலையாட்களுக்கு தேநீர் கொடுத்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.
காராமணிக்கு உரமாகும் கம்புத் தட்டைகள்!
“வீரிய கம்பு ரகங்களுக்கு வறட்சியைத் தாங்கி வளர்ற தன்மை குறைவு. அதே நேரத்துல நாட்டுக்கம்பு நன்செய், புன்செய்னு எல்லா நிலத்திலும் வறட்சியைத் தாங்கி வளரும். ஆடி மாதம் கிடைக்கிற குறைந்த மழையிலயே நல்லா மகசூல் கொடுக்கும். ஆடிப்பட்டத்துல நாட்டுக்கம்பை சாகுபடி செய்றப்போ கிடைக்கிற தட்டைகள் கார்த்திகைப் பட்டத்துல விதைக்கிற காராமணி பயிருக்கு இடுபொருளாகிடும். இதுவும் தொடர்ச்சியா நாட்டுக்கம்பு சாகுபடி செய்றதுக்கு ஒரு காரணம். வீரிய கம்பை விட, அதிகமான அளவுக்கு நாட்டுக் கம்புல நார்ச்சத்து இருக்கு. அதனாலதான் அந்தக் காலத்துல எல்லாரும் கம்பங்கூழ் குடிச்சாங்க. இந்த வருஷம் ஏழு ஏக்கர்ல கம்பு சாகுபடி செய்திருக்கேன்” என்ற சுந்தரம் நிறைவாக,
ஏக்கருக்கு 700 கிலோ!
‘‘தனிப்பயிராக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும்போது, இறவையில ஒரு ஏக்கருக்கு 800 கிலோவில் இருந்து ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியில் 600 கிலோவில் இருந்து 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நான் மானாவாரியில் சாகுபடி செய்திருக்கேன். சராசரியா 700 கிலோ வரை கிடைச்சுடும். கிலோ 25 ரூபாய்னு நேரடியாவே விற்பனை செய்யப் போறேன். 700 கிலோவை 25 ரூபாய் வீதம் விற்பனை செய்தா, 17 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இதில் எப்படியும் 12 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று தெம்பாகச் சொன்னார்!
தொடர்புக்கு :
சுந்தரம்,
செல்போன்: 84891-91774
ஆண்டு முழுவதும் கம்பங்கூழ்!
அழிவுநிலையில் இருக்கும் நாட்டுக்கம்பு ரகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், தென்பேர் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமமான நரசிங்கனூரைச் சேர்ந்த பாண்டியன். இவர், தனிப்பயிராகவும், கடலைக்கு ஊடுபயிராகவும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார். 10.1.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘செவந்தம்பட்டி கத்திரி... இருமடிப்பாத்தியில் செழிப்பான வளர்ச்சி!’ என்ற செய்தி மூலம் இவரும் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
“எங்க தாத்தாவுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்துச்சு. அந்த நிலத்துல ஆடிப்பட்டத்துல மல்லாட்டை (நிலக்கடலை) விதைக்கும் போது, நாட்டுக்கம்பு விதைகளையும் சேர்த்தே விதைப்பாங்க. அதுல கிடைக்கிற கம்பை வெச்சு வருஷம் முழுக்க எங்க வீட்டுல கம்பங்கூழ் தயார் செய்வாங்க. அதோட சுவையே தனிதான்” என்று பேச ஆரம்பித்த பாண்டியன் நாட்டுக்கம்பு குறித்துச் சொன்ன விஷயங்கள் இங்கே...
90 நாட்களில், தோண்டியில் கூழ்!
“இன்னைக்கு பல விதமான கம்பு ரகங்கள் வந்தாலும், நாட்டுக்கம்போட சுவைகிட்ட நிக்கவே முடியாது. இந்தக் கம்புல கூழ், அடை, பொரிமாவு, புட்டு, அவல்னு பலவிதமான பதார்த்தங்கள் செய்யலாம். ஆடிப்பட்டத்துல மல்லாட்டை விதைக்கும் போது, இதையும் சேர்த்து விதைச்சு விட்டா, மல்லாட்டை அறுவடையாகுறதுக்கு முன்னாடி கம்பு அறுவடையாகிடும். ‘30 நாள்ல தொண்டையில கதிர்; 60 நாளில் அக்கத்துல கதிர்; 90 நாளில் தோண்டியில கூழ்’னு நாட்டுக் கம்பு பற்றி என்னோட தாத்தா சொல்வார்.
சிட்டுக்குருவிக்காக விதைத்தேன்!
நாட்டுக்கம்பு அழிவு நிலையில இருக்கிறதுக்கு காரணம், சரியான விலை இல்லாததுதான். முன்னாடி எல்லா பகுதியிலும் விளைஞ்ச கம்பு மூட்டைகளை விழுப்புரம் மார்க்கெட் கமிட்டிக்குத்தான் ஜனங்க விற்பனைக்குக் கொண்டு போவாங்க. ஒரு குவிண்டால் கம்புக்கு 1,500 ரூபாய்ல இருந்து 1,700 ரூபாய்தான் விலை கிடைச்சது. அதனால விவசாயிங்க கொஞ்சம் கொஞ்சமா நாட்டுக்கம்பு சாகுபடியைக் கைவிட்டுட்டாங்க. சிட்டுக்குருவிகளோட அழிவுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறைஞ்சு போனதும் ஒரு காரணம்னு எனக்கு தோணுச்சு. அதனால, நாலு வருஷத்துக்கு முன்னாடி, மல்லாட்டை சாகுபடி செய்யும்போது, குருவிகளுக்கு உணவுக்காகவும், அழிவு நிலையில இருக்கிற நாட்டுக்கம்பு விதைகளைப் பாதுகாக்கணுங்கிறதுக்காகவும் சொந்தக்காரர் வீட்டுல இருந்து அரை கிலோ நாட்டுக்கம்பு விதை வாங்கி விதைச்சு விட்டேன். குருவிகள் சாப்பிட்டது போக, மீதம் மூணு கிலோ விதை கிடைச்சது. அதைத் தொடர்ச்சியா சாகுபடி செய்து, பாதுகாத்துக்கிட்டு வர்றேன். எனக்குத் தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரங்களுக்கு விதைகளைக் கொடுத்துக்கிட்டிருக்கேன்” என்ற பாண்டியன்,
ஊடுபயிரில் ஏக்கருக்கு 400 கிலோ!
“ஒரு ஏக்கர்ல கடலைக்கு ஊடுபயிரா சாகுபடி செய்தால், 400 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். விதைக்காக கிலோ 30 ரூபாய்னு கொடுக்கிறேன். சாப்பாட்டுக்காக உமி நீக்கம் செய்த கம்பை, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன்” என்றார், உற்சாகமாக.
தொடர்புக்கு, பாண்டியன், செல்போன்: 95006-27289
ஏக்கருக்கு 6 கிலோ விதை!
மானாவாரியாக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும் முறை பற்றி சுந்தரம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
நாட்டுக் கம்பின் வயது 75 முதல் 85 நாட்கள். பருவநிலை, மண் இவற்றைப் பொறுத்து 5 முதல் 10 நாட்கள் வயது கூடக் குறைய இருக்கலாம். நாட்டுக்கம்பு சாகுபடிக்கு ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் விதைக்கத் திட்டமிட்டால்... கோடையில் கிடைக்கும் மழையில் உழவு செய்து, ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி கலைத்து விட வேண்டும். எருவில் இருக்கும் ‘போக்குக் களைகள்’ முளைப்பு எடுத்ததும், மீண்டும் ஒரு உழவு செய்ய வேண்டும். ஆடிப்பட்டத்தில் முதல் மழை பெய்ததும் நிலத்தை உழுது, ஏக்கருக்கு 6 கிலோ முதல் 8 கிலோ வரை கம்பு விதைத்துவிட்டு, சீமைக்கருவேல மரத்தின் முள் அல்லது வேப்பங்கிளைகளைக் கொண்டு மேலே இழுத்து விதைகளை மண்ணில் பதிய வைக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!
விதைத்த 7-ம் நாளில் விதைகள் முளைத்து விடும். விதைத்த 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து இடைவெளி இல்லாத அளவுக்கு மூடிக்கொள்ளும் என்பதால், களை எடுக்கத் தேவையில்லை. நாட்டுக்கம்பில் அதிகமாக பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. அதனால், வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 35-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 55-ம் நாளுக்குப் பிறகு பால் பிடிக்கும். 65-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத்துவங்கி 70 முதல் 75-ம் நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். அறுவடை செய்த கதிர்களை சிமென்ட் களத்தில் இட்டு டிராக்டர் கொண்டு அடித்து சுத்தம் செய்துக்கொள்ளலாம்.
கம்புக்கு உயிர்மூடாக்கு நிலக்கடலை!
நிலக்கடலையில் ஊடுபயிராக நாட்டுக்கம்பு விதைப்பது பற்றி விளக்கிய பாண்டியன், “நாட்டுக்கம்பை விதைத்த பிறகு, நிலக்கடலை விதைகளை மாட்டு ஏர் ஓட்டி விதைக்க வேண்டும். நிலக்கடலை, கம்புக்கு உயிர்மூடாக்காக இருக்கும், அதேநேரத்தில் தழைச்சத்துகளையும் கிரகித்துக் கொடுக்கும். கம்புக் கதிர்களை உண்ண வரும் குருவிகள், கடலையில் இருக்கும் பூச்சிகளையும் பிடித்து சாப்பிடும். இதனால், கடலையிலும், கம்பிலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. 20-ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் டேங்குக்கு (10 லிட்டர்) ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 12 டேங்குகள் தேவைப்படும். பூக்கள் எடுக்கும் சமயத்தில் டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் புளித்த மோர் கலந்து தெளிக்க வேண்டும். 75 முதல் 85 நாட்களில் கம்பு அறுவடை முடியும். அதிலிருந்து, 15 முதல் 20 நாட்களுக்குப் பிறகுதான் கடலை அறுவடைக்கு வரும்” என்றார்.
விதைத் தேர்வு!
“நாட்டுக்கம்பு விதைகளை ஒரு முறை வாங்கி விதைத்தால், அடுத்த முறையில் இருந்து நாமே விதையை எடுத்துவைத்துக்கொள்ளலாம். நன்றாக விளைந்த நாட்டுக்கம்புக் கதிர்களில் பெரிய கதிராகவும், நன்றாக விளைந்த கதிராகவும் பார்த்துத் தேர்வு செய்து, அறுவடை செய்ய வேண்டும். அந்தக் கதிர்களை அப்படியே காய வைத்து, சாக்கில் இட்டு கட்டி வைத்து விட வேண்டும். அமாவாசை தினத்தன்று வெளியில் எடுத்துக் காய வைக்க வேண்டும். இப்படி மூன்று முறை காய வைத்து பத்திரப்படுத்தி வைத்து விட்டால், முளைப்புத் திறனும், விளைச்சலும் சிறப்பாக இருக்கும்” என்கிறார், பாண்டியன்.

Tuesday 3 May 2016

அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு.

அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!
விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது... ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.
பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு. கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.
ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில
16 குட்டிகள் இருக்கு. காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.
ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,
''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு,
100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.
முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.
முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்!
கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,
''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!
ஓமனிலிருந்து ஒரு ஆட்டுப்பண்ணை!
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் விவசாய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில், ஓமன் நாட்டிலிருந்தபடி, தன் மனைவி மூலமாக ஆட்டுப் பண்ணைத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணி. மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை. 4 போயர் உட்பட 60 தலைச்சேரி ஆடுகளை இதில் வளர்த்து வரும் மணியின் மனைவி தமிழ்ச்செல்வி, ஆடு வளர்ப்புக்கு தாங்கள் மாறிய கதையை கலகலவென சொன்னார்.
''சொந்த ஊரு கோயம்புத்தூருதான். என்னோட கணவர், ஒரு இன்ஜினீயர். அவர், வளைகுடா நாடுகள்ல வேலை பார்க்கறதால... 29 வருஷமா அங்கதான் இருந்தோம். ஓய்வுநேரத்துல 'ஃபேஸ்புக்' பார்க்கற வழக்கம் அவருக்கு உண்டு. அதுலயும் விகடன் குழும இதழ்களோட 'ஃபேஸ்புக்' எல்லாத்தையும் விடாமல் பார்ப்பார். அப்படி பசுமை விகடன் 'ஃபேஸ்புக்' பார்க்க ஆரம்பிச்சதுல, விவசாயம், கால்நடை வளர்ப்பு மேல அவருக்கு ஆர்வம் வந்துடுச்சு.
ஏற்கெனவே இந்த கிராமத்துல தண்ணீர் வசதியோட ஒண்ணரை ஏக்கர் நிலம் எங்களுக்கு இருந்துச்சு. சில வருஷத்துல ஊர் திரும்பி, அதுல வீடுகட்டி குடியிருக்கலாம்னு யோசனை எங்களுக்கு இருந்துச்சு. ஆனா, ஆட்டுப்பண்ணை அமைக்க லாம்கிற ஆர்வம் காரணமா என்னை மட்டும் ஊருக்கு அனுப்பினார். உடனடியா ஆட்டுபண்ணையை உருவாக்கிட்டேன். தினமும் போன் மூலம் தகுந்த ஆலோசனைகளை அங்கிருந்தபடியே சொல்லிட்டு வர்றார் கணவர்'' எனும் தமிழ்செல்விக்கு, ஆட்டுப் பண்ணை அமைக்க, மொத்தம் ஆன செலவு 14 லட்சம் ரூபாய்.
''60 க்கு 40 அடி நீளத்தில் 7 அடி உயரமுள்ள பால்கனி மீது 7 அடி உயரம் கொண்ட செட் அமைச்சு இருக்கோம். தீவனப்புல் 1 ஏக்கர்ல போட்டிருக்கோம். அடர்தீவனமும் கொடுக்கிறோம். பண்ணை அமைச்சு 3 மாசம்தான் ஆச்சு. இப்ப 7 குட்டிகள் புது வரவா வந்திருக்கு. இன்னும் 10 மாசம் கழிச்சுத்தான் வருமான கணக்கு சொல்லமுடியும்.
ஆடுவளர்க்கற அனுபவ விவசாயிகள்கிட்டயும், தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தின ஆடுவளர்ப்புப் பயிற்சியிலும் கலந்துக்கிட்டு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பக்காவான ஆடுவளர்ப்பு விவசாயியா மாறிட்டேன். இது மொத்தத்துக்கும் காரணமே பசுமை விகடன்தான்'' என்று ஆட்டுக்குட்டிகளைச் செல்லமாக அணைத்தபடி சொன்னார் தமிழ்ச்செல்வி.
மணியிடம் தொலைபேசி மூலமாக பேசியபோது, ''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. மாப்பிள்ளையும் ஓமன்லதான் வேலை பாக்கறாரு. ரெண்டாவது பொண்ணு, சொந்த ஊர்லயே காலேஜ் படிக்கறா. பசுமை விகடன் படிச்ச பிறகு, 'வெளிநாட்டுல வேலை பாத்தது போதும். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பாக்கலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். ஆள் பற்றாக்குறை இருக்கறதால, பராமரிப்பு குறைவான, சந்தை வாய்ப்புள்ள ஆடு வளர்ப்புத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கேன். தீவனம் வெட்டிப் போடுறதுக்கு ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வெச்சுருக்கோம். பராமரிப்புச் செலவை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்துல ஒரு ஆட்டுக்கான பராமரிப்புச் செலவு, ஒரு மாசத்துக்கு 14 ரூபாயா இருந்துச்சு. இப்ப 10 ரூபாயா குறைச்சுருக்கோம் (தீவனம் தவிர்த்து). சீக்கிரமே நானும் இந்தியாவுக்குத் திரும்பி, ஆடு வளர்ப்புல முழு கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், மணி.
மணியுடன் தொடர்புகொள்ள : mrtmani@yahoo.co.in
தொடர்புக்கு,
விஜயகுமார்,
செல்போன்: 93444-16089

Monday 25 April 2016

ஒரு ஏக்கர் பரப்பில் பந்தல் அமைத்து புடலை சாகுபடி


ஏக்கருக்கு 180 கல்தூண்கள்!
பந்தல் காய்கறிகளுக்குப் பட்டம் கிடையாது. அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். புடலை 150 நாள் பயிர். தேர்வு செய்த நிலத்தில், 15 அடி இடைவெளியில் 10 அடி உயரமுள்ள கல்தூண்களை ஓர் அடி ஆழத்துக்குக் குழிபறித்து ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 180 கல்தூண்கள் தேவைப்படும். பிறகு, கம்பி கொண்டு பந்தல் அமைத்து... 4 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி மினி டிராக்டர் மூலம் உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, ஓர் உழவு செய்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வரிசையிலும் 2 அடி இடைவெளியில் கையால் குழி பறிக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைநேர்த்தி செய்த புடலை விதைகளை விதைத்து மண் கொண்டு மூடி பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும்.
விதைத்த மறுநாள் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்ய வேண்டும். 5ம் நாள் முதல் 10ம் நாளுக்குள் தளிர் எட்டிப் பார்க்கும். 15ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா, 20 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தோட்டம் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இது போல தெளிக்க வேண்டும்.
18ம் நாள் முதல் 20ம் நாளுக்குள் கொடி படரும். கொடி படர்ந்ததும், கொடிமுனையில் கயிறு கட்டி கயிற்றின் மறு முனையைப் பந்தலில் கட்ட வேண்டும். 35ம் நாளுக்குள் கொடி வளர்ந்து பந்தலை அடைந்து விடும்.
40ம் நாளுக்கு மேல் பூக்கத்தொடங்கும். 50ம் நாளுக்கு மேல் காய்கள் தென்படும். 60ம் நாளில் இருந்து காய் பறிக்கத் தொடங்கலாம். 75ம் நாளுக்கு மேல் அதிகளவில் காய்கள் காய்க்கும். 150ம் நாள் வரை காய் பறிக்கலாம்.
20, 40, 60 மற்றும் 80ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும்... 20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 20 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் வைக்க வேண்டும்.
ஒரே சந்தையை நம்பக்கூடாது!
'ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசினு மூணு ஊரு சந்தைகளுக்கும் நான் காய் அனுப்புறேன். எப்பவுமே ஒரே சந்தையை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. ஒரே சந்தையில மொத்தக் காயையும் விற்கும்போது விலையைக் குறைச்சிடுவாங்க. 'இதுதான் விலை... இல்லை வேண்டாம்னா எடுத்துக்கிட்டுப் போங்க’னு ஈஸியா சொல்லிடுவாங்க. காய்களைப் பறிச்சு மூட்டைக் கட்டி, அவ்வளவு தூரம் கொண்டு போய் விலைக்குப் போடும்போது, வியாபாரி வேண்டாம்னு சொன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனால எப்பவுமே, குறைஞ்சது இரண்டு சந்தைகளையாவது கையில வச்சிருக்கணும். அப்பத்தான் ஒரு சந்தையில விலை இல்லாட்டாலும், இன்னொரு சந்தையில விலை கிடைக்கும். விலையில ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நஷ்டம் வராது' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
முயல்கள், எலிகள் தொல்லைக்கு கூமுட்டைக் கரைசல்!
'இந்தப் பகுதிகளில் முயல் தொல்லை அதிகம். புடலை விதை ஊன்றிய அன்றே குழியைத் தோண்டி விதையை எடுத்துவிடும். தப்பிச்சு வர்ற கொடிகளை தண்டுப்பகுதியில் கடிச்சி விட்டுடும். ரெண்டு அழுகின முட்டையை (கூமுட்டை) உடைச்சு 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி, வாரம் ஒரு முறை கொடியைச் சுற்றி தெளிச்சு விட்டா போதும். தோட்டத்துப் பக்கம் முயல் எட்டி கூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம்' என்கிறார், ராதாகிருஷ்ணன்.
சிவப்பு வண்டுத் தாக்குதலுக்கு இஞ்சிபூண்டுக் கரைசல்!
கொடி படர ஆரம்பித்தவுடன் சிவப்பு வண்டுகள் தாக்கலாம். இலை அல்லது தண்டுகளில் ஒரு சிவப்பு வண்டு தென்பட்டாலும், உடனே பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 250 கிராம் இஞ்சி, 250 கிராம் பூண்டு ஆகியவற்றை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையிலிருந்து 100 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
புடலங்காயின் பயன்கள்!
புடலங்காய் நம் உடலிலுள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றுகிறது. தண்ணீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதோடு, உடலிலுள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும் தன்மை கொண்டிருக்கிறது. புடலை இலைச்சாறுடன், கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்க வைத்த தன்ணீரை தினமும் 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள் வரும். புடலங்காயில் வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பிஞ்சு அல்லது நடுத்தர காயைத்தான் சாப்பிட வேண்டும்.
பூஞ்சண நோயைக் கட்டுப்படுத்தும் விதைநேர்த்தி!
100 மில்லி பஞ்சகவ்யாவை, 300 மில்லி தண்ணீரில் கலந்து, அதில் புடலை விதைகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் விதைகளை எடுத்து, அவற்றின் மீது, 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து தூவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்தால், பூஞ்சண நோய் வராது

Monday 4 April 2016

யிர்உரங்களின்‬ பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்

1.சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால் என்னவென்று பார்க்கலாமா?
சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி , குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும்.
2. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் எப்படி நோய்களை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போமா?
சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
2.சூடோமோனஸ் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாமா?
சூடோமோனஸை பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது
பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது
3.சூடோமோனஸை எதெதுக்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாமா? விதை, கிழங்கு? நாற்று நேர்த்தி செய்யலாம்?
அடியுரமாக போடலாம்
தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம்.
4.சூபோமோனஸ்சை கொண்டு எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்
5.சூபோமோனஸ்சை அடியுரமாக எப்படி பயன்படுத்தலாம்?
2 கிலோ சூபோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும்.
6.சூபோமோனஸ்சை தண்ணீருடன் எப்படி கலந்து தெளிப்பது என்று பார்க்கலாமா?
சூபோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.
7.வேம் என்றால் என்ன என்று பார்க்கலாமா?
வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும்.
8.வேம் என்னால் என்ன, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாமா?
வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
9.வேம் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா?
வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும்
வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொடுக்கிறது மகசூல் 10 மதல் 15 சதம் அதிகரிக்கிறது
10.வேம்மை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிலேர் வேம் உயிர் உரத்தை விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் கிழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும். வளர்ந்தபயிருக்கு 50 முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும். பாலித்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசனம் போடவும், 1000 கிலோ மண்கலவையில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.
11.டிரைக்கோடெர்மா விரிடினா என்னானு தெரிந்து கொள்ளலாமா?
பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பறவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக்கொல்லியாகும்.
12.டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்களைப் பற்றி பார்க்கலாமா?
டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
13.டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலமா?
பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது
மண்ணி;ல் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.
14.டிரைக்கோடெர்மா விரிடியை எந்தெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்
15.டிரைக்கோடெர்மா விரிடியை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாமா?
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.
16.டிரைக்கோடெர்மா விரிடியை அடியுரமாக எவ்வாறு போடாலாம் என்று பார்க்கலாமா?
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் ( சாணம்; உரம்) 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.
டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.
17.அசோஸ்பைரில்லம் என்றால் என்ன?
அசோஸ்பைரில்லம் என்பது ஒரு உயிர் உரம் இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிறகித்து பயிருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை கிடைக்க செய்யும். பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது.
18.அசோஸ்பைரில்லத்தை எதுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
அசோஸ்பைரில்லத்தை அனைத்துவகை பயிர்வகை பயிர்களை தவிர மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்
19.அசோஸ்பைரில்லத்தை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்?
பயிர்களின் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது
இரசாயண உரத்தின் அளவு 25 சதம் குறைக்கிறது.
மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது
விதை முளைப்புதறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.
20.பாஸ்போ பாக்டீரியா என்றால் என்னனு பார்க்கலாமா?
பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இது மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது அனைத்துவகை பயிர்களுக்கும்; பயன்படுத்தலாம்
21.பாஸ்போபாக்டீரியாவை எந்நெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
விதை நேர்த்தி செய்யலாம், நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடலாம், அடியுரமாக போடலாம்,
22.பாஸ்போபாக்டீரியாவை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்கலாமா?
பாஸ்போபாக்டீரியா 20 கிராம் ஒரு கிலோ விதையுடன் நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யவும்.
23.பாஸ்போபாக்டீரியாவை அடியுரமாக எப்படி கொடுக்கலாம் என்று பார்க்கலாமா?
பாஸ்போபாக்டீரியாவை 2 கிலோவை 100 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 5 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடிவைத்து பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும்பொழுது தூவிவிடலாம்.
24.பாஸ்போபாக்டீரியாவை நாற்றுக்களில் எவ்வாறு நனைத்து நடவு செய்யலாம் என்று பார்க்கலாமா?
பாஸ்போபாக்டீரியா அரைக் கிலோவை 15 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து விடவும் பிறகு நாற்று, கிழங்கு வகைகளை நனைத்து நடவு செய்யலாம்.
25.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்றால் என்ன என்று பார்க்கலாமா?
காய்ப்புழுவிற்கு டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்பது இது ஒரு குளவி இனத்தை சேர்ந்தது தீமை செய்யும் பூச்சியின் முட்டைக் கருவை தின்று இறுதியில் கொன்று விடும். தீமை செய்யும் பூச்சிகளை முட்டை பருவத்திலே அழிப்பதால் பயிர்களில் சேதம் ஏற்படுவதில்லை
26.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை நெல், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் மற்றும் பயிர்வகைகள் மானாவாரி பயிர்களில் பயன்படுத்தலாம்
27.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி எந்தெந்த புழுக்களின் முட்டைகளை கட்டுப்படுத்துகிறது என்று தெரிந்து கொள்வோமோ?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுபுழு மற்றும் காய்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைபருவத்தை கட்டுப்படுத்துகிறது
28.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி பர்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பானது,எளியமுறைகளில் கையாளலாம், ரசாயணப்பூச்சி கொல்லிகளின் உபயோகம் 35 சதம்வரை குறையும்.
29.டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி ஓரு ஏக்கருக்கு 5 மில்லி அட்டை பயன்படுத்தலாம். 1 மில்லி அட்டையிலிருந்து சுமார் 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் குளவிகள் வரை பொரித்து வெளிவரும்.அட்டை துண்டுகளை நூலினால் செடியின் இலையோடு கட்ட வேண்டும்.
30.பெசிலியோமைசிஸ் என்பது என்னவென்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் என்பது பயிர்களில் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணமாகும்.
31.பெசிலியோமைசிஸை எந்தெந்த பயிர்களில் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோமா?
பெசிலியோமைசிஸை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
32.பெசிலியோமைசிஸை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
பெசிலியோமைசிஸை விதைநேர்த்தி செய்யலாம், அடியுரமாக போடலாம், நாற்று, கிழுங்கு நேர்த்தி செய்யலாம், வேரிமூலம் ஊற்றலாம்
33.பெசிலியோமைசிஸை எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவுடரை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லி;யுடன் கலந்து விதைநேர்த்தி செய்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்.
34. பெசிலியோமைசிஸை அடியுரமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் 2 முதல் 3 கிலோ பவுடரை 100 கிலோ இயற்கை உரத்துடன் ( சாண உரம்) கலந்து 10 முதல் 15 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடி வைத்து பிறகு அடியுரமாக இடலாம்

Tuesday 15 March 2016

மானாவாரியில் மகத்தான விளைச்சல்... நட்டமில்லாத வருமானம் கொடுக்கும் நாட்டுக்கம்பு!

“கிணறு, போர்வெல் என பாசன முறைகள் நவீனமாக மாறினாலும்... பெரும் பகுதி விவசாயம் நடப்பது மானாவாரி நிலங்களில்தான். சோளம், கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை எனப் பல பயிர் ரகங்கள் இருந்தாலும், மானாவாரி விவசாயத்தில் நாட்டுக் கம்புக்கு என்றைக்கும் தனியான இடமுண்டு” என்கிறார், விழுப்புரம் மாவட்டம், தென்பேர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம்.
உயரமாக, கம்பீரமாகக் காட்சி கொடுத்த நாட்டுக்கம்புக் கதிர்களை பெண்கள் அறுவடை செய்துகொண்டிருக்க... அப்பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சுந்தரத்தைச் சந்தித்தோம்.
வெற்றிக்குப் பாடம் சொல்லிய விவசாயிகள்!
“நான் விவசாயத்துக்கு வந்த காலந்தொட்டு கேழ்வரகு, சோளம், கம்புனு சாகுபடி செய்றேன். எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரிங்கிறதால ஆரம்பத்துல அங்க இருந்த நிலத்துல இறவைப் பாசனத்துல வீரிய கம்பு ரகங்களை சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு 20 மூட்டை கம்பு கிடைக்கும். அப்பறம், அங்க இருக்கிற நிலத்தை விற்பனை செய்துட்டு, இங்க வந்து 57 ஏக்கர் நிலம் வாங்கினேன். அதுல, 50 ஏக்கர்ல மா, நெல்லி, சப்போட்டானு பழ மரங்களையும் மர பயன்பாட்டுக்கான மரங்களையும் நடவு செய்திருக்கேன். மீதி 7 ஏக்கர்ல மானாவாரியா விவசாயம் செய்துக்கிட்டிருக்கேன்.
ஆரம்பத்துல இந்த நிலத்துல வீரிய கம்பு ரகங்களைத்தான் சாகுபடி செஞ்சேன். அதுல, விளைச்சல் போதுமான அளவுக்கு இல்லை. அப்பறம் அக்கம்பக்கத்துல இருக்கிற விவசாயிகள்கிட்ட கேட்டப்போ... அவங்க ஆடிப்பட்டத்துல நிலக்கடலை, அல்லது நாட்டுக்கம்பு, கார்த்திகைப் பட்டத்துல காராமணினு சாகுபடி செய்றதா சொன்னாங்க. நானும் அதே மாதிரி சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். குறைந்த செலவு, அதிகமான உழைப்பு இல்லாம போதுமான அளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. அதனாலதான் தொடர்ச்சியா 10 வருஷமா நாட்டுக்கம்பு சாகுபடிய செஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்ற சுந்தரம், வேலையாட்களுக்கு தேநீர் கொடுத்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.
காராமணிக்கு உரமாகும் கம்புத் தட்டைகள்!
“வீரிய கம்பு ரகங்களுக்கு வறட்சியைத் தாங்கி வளர்ற தன்மை குறைவு. அதே நேரத்துல நாட்டுக்கம்பு நன்செய், புன்செய்னு எல்லா நிலத்திலும் வறட்சியைத் தாங்கி வளரும். ஆடி மாதம் கிடைக்கிற குறைந்த மழையிலயே நல்லா மகசூல் கொடுக்கும். ஆடிப்பட்டத்துல நாட்டுக்கம்பை சாகுபடி செய்றப்போ கிடைக்கிற தட்டைகள் கார்த்திகைப் பட்டத்துல விதைக்கிற காராமணி பயிருக்கு இடுபொருளாகிடும். இதுவும் தொடர்ச்சியா நாட்டுக்கம்பு சாகுபடி செய்றதுக்கு ஒரு காரணம். வீரிய கம்பை விட, அதிகமான அளவுக்கு நாட்டுக் கம்புல நார்ச்சத்து இருக்கு. அதனாலதான் அந்தக் காலத்துல எல்லாரும் கம்பங்கூழ் குடிச்சாங்க. இந்த வருஷம் ஏழு ஏக்கர்ல கம்பு சாகுபடி செய்திருக்கேன்” என்ற சுந்தரம் நிறைவாக,
ஏக்கருக்கு 700 கிலோ!
‘‘தனிப்பயிராக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும்போது, இறவையில ஒரு ஏக்கருக்கு 800 கிலோவில் இருந்து ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியில் 600 கிலோவில் இருந்து 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நான் மானாவாரியில் சாகுபடி செய்திருக்கேன். சராசரியா 700 கிலோ வரை கிடைச்சுடும். கிலோ 25 ரூபாய்னு நேரடியாவே விற்பனை செய்யப் போறேன். 700 கிலோவை 25 ரூபாய் வீதம் விற்பனை செய்தா, 17 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இதில் எப்படியும் 12 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று தெம்பாகச் சொன்னார்!
தொடர்புக்கு,
சுந்தரம்,
செல்போன்: 84891-91774
ஆண்டு முழுவதும் கம்பங்கூழ்!
அழிவுநிலையில் இருக்கும் நாட்டுக்கம்பு ரகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், தென்பேர் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமமான நரசிங்கனூரைச் சேர்ந்த பாண்டியன். இவர், தனிப்பயிராகவும், கடலைக்கு ஊடுபயிராகவும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார். 10.1.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘செவந்தம்பட்டி கத்திரி... இருமடிப்பாத்தியில் செழிப்பான வளர்ச்சி!’ என்ற செய்தி மூலம் இவரும் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
“எங்க தாத்தாவுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்துச்சு. அந்த நிலத்துல ஆடிப்பட்டத்துல மல்லாட்டை (நிலக்கடலை) விதைக்கும் போது, நாட்டுக்கம்பு விதைகளையும் சேர்த்தே விதைப்பாங்க. அதுல கிடைக்கிற கம்பை வெச்சு வருஷம் முழுக்க எங்க வீட்டுல கம்பங்கூழ் தயார் செய்வாங்க. அதோட சுவையே தனிதான்” என்று பேச ஆரம்பித்த பாண்டியன் நாட்டுக்கம்பு குறித்துச் சொன்ன விஷயங்கள் இங்கே...
90 நாட்களில், தோண்டியில் கூழ்!
“இன்னைக்கு பல விதமான கம்பு ரகங்கள் வந்தாலும், நாட்டுக்கம்போட சுவைகிட்ட நிக்கவே முடியாது. இந்தக் கம்புல கூழ், அடை, பொரிமாவு, புட்டு, அவல்னு பலவிதமான பதார்த்தங்கள் செய்யலாம். ஆடிப்பட்டத்துல மல்லாட்டை விதைக்கும் போது, இதையும் சேர்த்து விதைச்சு விட்டா, மல்லாட்டை அறுவடையாகுறதுக்கு முன்னாடி கம்பு அறுவடையாகிடும். ‘30 நாள்ல தொண்டையில கதிர்; 60 நாளில் அக்கத்துல கதிர்; 90 நாளில் தோண்டியில கூழ்’னு நாட்டுக் கம்பு பற்றி என்னோட தாத்தா சொல்வார்.
சிட்டுக்குருவிக்காக விதைத்தேன்!
நாட்டுக்கம்பு அழிவு நிலையில இருக்கிறதுக்கு காரணம், சரியான விலை இல்லாததுதான். முன்னாடி எல்லா பகுதியிலும் விளைஞ்ச கம்பு மூட்டைகளை விழுப்புரம் மார்க்கெட் கமிட்டிக்குத்தான் ஜனங்க விற்பனைக்குக் கொண்டு போவாங்க. ஒரு குவிண்டால் கம்புக்கு 1,500 ரூபாய்ல இருந்து 1,700 ரூபாய்தான் விலை கிடைச்சது. அதனால விவசாயிங்க கொஞ்சம் கொஞ்சமா நாட்டுக்கம்பு சாகுபடியைக் கைவிட்டுட்டாங்க. சிட்டுக்குருவிகளோட அழிவுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறைஞ்சு போனதும் ஒரு காரணம்னு எனக்கு தோணுச்சு. அதனால, நாலு வருஷத்துக்கு முன்னாடி, மல்லாட்டை சாகுபடி செய்யும்போது, குருவிகளுக்கு உணவுக்காகவும், அழிவு நிலையில இருக்கிற நாட்டுக்கம்பு விதைகளைப் பாதுகாக்கணுங்கிறதுக்காகவும் சொந்தக்காரர் வீட்டுல இருந்து அரை கிலோ நாட்டுக்கம்பு விதை வாங்கி விதைச்சு விட்டேன். குருவிகள் சாப்பிட்டது போக, மீதம் மூணு கிலோ விதை கிடைச்சது. அதைத் தொடர்ச்சியா சாகுபடி செய்து, பாதுகாத்துக்கிட்டு வர்றேன். எனக்குத் தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரங்களுக்கு விதைகளைக் கொடுத்துக்கிட்டிருக்கேன்” என்ற பாண்டியன்,
ஊடுபயிரில் ஏக்கருக்கு 400 கிலோ!
“ஒரு ஏக்கர்ல கடலைக்கு ஊடுபயிரா சாகுபடி செய்தால், 400 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். விதைக்காக கிலோ 30 ரூபாய்னு கொடுக்கிறேன். சாப்பாட்டுக்காக உமி நீக்கம் செய்த கம்பை, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன்” என்றார், உற்சாகமாக.
தொடர்புக்கு, பாண்டியன், செல்போன்: 95006-27289
ஏக்கருக்கு 6 கிலோ விதை!
மானாவாரியாக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும் முறை பற்றி சுந்தரம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
நாட்டுக் கம்பின் வயது 75 முதல் 85 நாட்கள். பருவநிலை, மண் இவற்றைப் பொறுத்து 5 முதல் 10 நாட்கள் வயது கூடக் குறைய இருக்கலாம். நாட்டுக்கம்பு சாகுபடிக்கு ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் விதைக்கத் திட்டமிட்டால்... கோடையில் கிடைக்கும் மழையில் உழவு செய்து, ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி கலைத்து விட வேண்டும். எருவில் இருக்கும் ‘போக்குக் களைகள்’ முளைப்பு எடுத்ததும், மீண்டும் ஒரு உழவு செய்ய வேண்டும். ஆடிப்பட்டத்தில் முதல் மழை பெய்ததும் நிலத்தை உழுது, ஏக்கருக்கு 6 கிலோ முதல் 8 கிலோ வரை கம்பு விதைத்துவிட்டு, சீமைக்கருவேல மரத்தின் முள் அல்லது வேப்பங்கிளைகளைக் கொண்டு மேலே இழுத்து விதைகளை மண்ணில் பதிய வைக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!
விதைத்த 7-ம் நாளில் விதைகள் முளைத்து விடும். விதைத்த 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து இடைவெளி இல்லாத அளவுக்கு மூடிக்கொள்ளும் என்பதால், களை எடுக்கத் தேவையில்லை. நாட்டுக்கம்பில் அதிகமாக பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. அதனால், வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 35-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 55-ம் நாளுக்குப் பிறகு பால் பிடிக்கும். 65-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத்துவங்கி 70 முதல் 75-ம் நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். அறுவடை செய்த கதிர்களை சிமென்ட் களத்தில் இட்டு டிராக்டர் கொண்டு அடித்து சுத்தம் செய்துக்கொள்ளலாம்.
கம்புக்கு உயிர்மூடாக்கு நிலக்கடலை!
நிலக்கடலையில் ஊடுபயிராக நாட்டுக்கம்பு விதைப்பது பற்றி விளக்கிய பாண்டியன், “நாட்டுக்கம்பை விதைத்த பிறகு, நிலக்கடலை விதைகளை மாட்டு ஏர் ஓட்டி விதைக்க வேண்டும். நிலக்கடலை, கம்புக்கு உயிர்மூடாக்காக இருக்கும், அதேநேரத்தில் தழைச்சத்துகளையும் கிரகித்துக் கொடுக்கும். கம்புக் கதிர்களை உண்ண வரும் குருவிகள், கடலையில் இருக்கும் பூச்சிகளையும் பிடித்து சாப்பிடும். இதனால், கடலையிலும், கம்பிலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. 20-ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் டேங்குக்கு (10 லிட்டர்) ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 12 டேங்குகள் தேவைப்படும். பூக்கள் எடுக்கும் சமயத்தில் டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் புளித்த மோர் கலந்து தெளிக்க வேண்டும். 75 முதல் 85 நாட்களில் கம்பு அறுவடை முடியும். அதிலிருந்து, 15 முதல் 20 நாட்களுக்குப் பிறகுதான் கடலை அறுவடைக்கு வரும்” என்றார்.
விதைத் தேர்வு!
“நாட்டுக்கம்பு விதைகளை ஒரு முறை வாங்கி விதைத்தால், அடுத்த முறையில் இருந்து நாமே விதையை எடுத்துவைத்துக்கொள்ளலாம். நன்றாக விளைந்த நாட்டுக்கம்புக் கதிர்களில் பெரிய கதிராகவும், நன்றாக விளைந்த கதிராகவும் பார்த்துத் தேர்வு செய்து, அறுவடை செய்ய வேண்டும். அந்தக் கதிர்களை அப்படியே காய வைத்து, சாக்கில் இட்டு கட்டி வைத்து விட வேண்டும். அமாவாசை தினத்தன்று வெளியில் எடுத்துக் காய வைக்க வேண்டும். இப்படி மூன்று முறை காய வைத்து பத்திரப்படுத்தி வைத்து விட்டால், முளைப்புத் திறனும், விளைச்சலும் சிறப்பாக இருக்கும்” என்கிறார், பாண்டியன்.