Sunday 24 January 2016

தேங்காய்ப்பால் மோர்கரைசல்

தேங்காய்ப்பால் மோர் கலந்த கலவைக்கு இப்பெயர். நன்கு புளித்த மோர் 5 லிட்டர் 10 தேங்காய்களை உடைத்து துருவி எடுத்த தேங்காய் துருவலுடன் தேவையான நீர் சேர்த்து நன்கு ஆட்டி 5 லிட்டர் பால் எடுக்கவும்ம் ( தேங்காயினுள் இருக்கும் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை எடுத்து நன்கு கலந்து கொண்டு ஒரு மண்பானையில் 7 நாட்களுக்கு ஊற விட வேண்டும். கலவை நன்கு நொதித்தப் புளித்து வரும். இப்போது கலவையை எடுத்து 1 லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். இதற்கு பயிர்களை வளர்க்கும் ஆற்றலும். பூச்சிகளை விரட்டும் குணமும் பூசண நோயைக் தாங்கி வளரும் தன்மையும் உண்டு. பயிர்களின் பூக்கும் திறன் அதிகரிக்கிறது. இந்தக் கரைசல் சைட்டோசைம் என்று அழைக்கப்படும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றலைக் கொண்டது. மிக எளிய முறையில் இக்கரைசலைத் தயாரிக்கலாம்

No comments:

Post a Comment