Tuesday 3 April 2018

இயற்கை களைக்கொல்லி

தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
10 லிட்டர் கோமியம்
2 கிலோ எருக்கம் இலை
2 கிலோ - கல்உப்பு
அரைக்கிலோ – சுண்ணாம்புக்கல்
(சுண்ணாம்பு பவுடரை சேர்க்கக்கூடாது)
தேவைகேற்ப எலுமிச்சை பழம்
செய்முறை
எருக்கம் இலை 2 கிலோவை நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை கோமியத்தில் ஊற விடவும்.
பிறகு சுண்ணாம்புக் கல்லையும் அவற்றில் போட்டு ஊற விட வேண்டும்.
கல் உப்பை தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும்.
ஒரு வாரத்தில் இயற்கை களைக்கொல்லி தயாராகி விடும்.
பயன்படுத்தும் முறை
களைக்கொல்லி கரைசல் ஒரு லிட்டர்
9 லிட்டர் தண்ணீர்
என்ற விகிதத்தில் கலந்து
களைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
தெளிக்கும் பொழுது ஒரு எலுமிச்சைப் பழத்தின்சாறு கலந்து தெளிக்கவும்
பயன்கள்
சிறிய களைகள் முதல் பெரிய களைகள் வரை நன்றாக காய்ந்து விடும்
களைக்கொல்லி தெளிக்கும் பொழுத பயிர் சாகுபடி செய்திருந்தால் அவற்றின் மேல் படாதவாறு தெளிக்க வேண்டும்.
முற்றிலும் இயற்கையான களைக்கொல்லி
செலவு குறைவு பலன் அதிகம்
சுற்றுபுற சூழல் பாதுகாப்பானது

No comments:

Post a Comment