Thursday 8 April 2021

தென்னையில் எவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்?

 

தென்னையில் எவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்?
ஊடுபயிர் சாகுபடி தென்னைக்குக் கூடுதல் மகசூலை அளிக்க வல்லது. அவ்வாறு தென்னையில் எந்தெந்த பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ஊடுபயிர் தேர்வு (Intercropping selection)
தென்னந்தோப்பில் சாகுபடி செய்ய ஊடு பயிரைத் தேர்வு செய்யும் போது அந்தப்பகுதி தட்பவெப்பநிலை, மண் மற்றும் அந்த விளைப்பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்.
தோட்டக்கலை
தென்னையில் எவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்?
ஊடுபயிர் சாகுபடி தென்னைக்குக் கூடுதல் மகசூலை அளிக்க வல்லது. அவ்வாறு தென்னையில் எந்தெந்த பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ஊடுபயிர் தேர்வு (Intercropping selection)
தென்னந்தோப்பில் சாகுபடி செய்ய ஊடு பயிரைத் தேர்வு செய்யும் போது அந்தப்பகுதி தட்பவெப்பநிலை, மண் மற்றும் அந்த விளைப்பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் தென்னை மரங்களின் இலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
7 ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடைய மரங்கள் (Trees less than 7 years old)
அந்தந்த பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 5 ஆண்டுகள் வரை.
உகந்த பயிர்கள் (Optimal crops)
ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.
தவிர்க்க வேண்டிய பயிர்கள் (Crops to avoid)
கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
7-20 ஆண்டுகள் வயதுள்ள தோப்புகள்
இந்தக் காலக்கட்டத்தில் பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை (நேப்பியர் மற்றும் கினியா புல்) பயிர் செய்யலாம்.
20 ஆண்டு மரங்கள் (20 year old trees)
ஒரு பருவப்பயிர் (A seasonal crop)
நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி ஆகியவற்றைச் சாகுபடி செய்யலாம்.
இருபருவப் பயிர் (Biennial crop)
வாழையில் பூவன் மற்றும் மொந்தன் இரகங்கள் ஏற்றவைகளாகும்.
பல ஆண்டு பயிர்கள் (Perennial Crops:)
கோகோ, மிளகு (பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா), ஜாதிக்காய் மற்றும் வனிலா.
இதில் கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவை பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு ஏற்றவை. வனிலா பயிரிட, நோய் தாக்குதல் இல்லாத நடவு தண்டைப் பயன்படுத்தவேண்டும். மேலும் நட்டபின் நோய் தாக்குதல் பாதுகாக்கவேண்டும்.
பல பயிர் அமைப்பு (Multiple crop system)
தென்னையுடன் வாழை, சிறுகிழங்கு, வெண்டை ஆகியவை கிழக்குப் பகுதிகளுக்கு ஏற்றவை.
தென்னையுடன் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவற்றை மேற்குப் பகுதிகளில் பயிரிடலாம்.
மேலே கூறிய பயிரமைப்புளில் ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு உரம் மற்றும் நிர்பாபசனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்

எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்

 எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் . சித்திரை:

1. உளுந்து
2. நிலக்கடலை
3. தினை
4 எள்
5.சோளம்
6.நாட்டுக்கம்பு
7.துவரை
8. வெங்காயம்
9. சேனைக்கிழங்கு
வைகாசி :
1. எள்
2. உளுந்து
3. முருங்கை
4. சூரியகாந்தி
5. நிலக்கடலை
6. சாமை
7. ராகி
8. பனிவரகு
9. கருத்தக்கார்
10. ரஸ்தாளி வாழை
11. ஆனைக்கொம்பன் வெண்டை
12. சின்ன வெங்காயம்
13. வெண்டை
14. புதினா
15. சேப்பங்கிழங்கு
16. மஞ்சள்
ஆனி:
1. உளுந்து
2. மஞ்சள்
3. நிலக்கடலை
4. செம்பருத்தி
5. வெண்டை
6. எள்
7. மா
8. சின்ன வெங்காயம்
9. சாமை
10. கொடி பீன்ஸ்
ஆடி:
1. சோளம்
2. ராகி
3. கம்பு
4. துவரை
5. நாட்டுப் பருத்தி
6. வாழை
11. நிலக்கடலை
12. செடிமுருங்கை
13. உளுந்து
14. பாசிப்பயறு
15. சூரியகாந்தி
16. காவளிக் கிழங்கு
17. எலுமிச்சை
18. மிளகாய்
19. குதிரைவாலி
20. வரகு
21. தினை
22. சாமை
23. நேந்திரன் வாழை
24. சேனைக்கிழங்கு
25. பப்பாளி
26. செம்பருத்தி
27. வெண்டை
28. மாப்பிள்ளைச் சம்பா
29. மா
30. மல்லிகை
31. சின்ன வெங்காயம்
32. நாட்டுக்கம்பு
33. நாடன் வாழை
34. கொய்யா
35. கோவைக்காய்
36. வெண்டை
37. கத்திரி
38. தக்காளி
39. முள்ளங்கி
40. பாகல்
41. பீர்க்கன்
42. புடலை
43. கறுப்பு மொச்சை
ஆவணி :
1. நிலக்கடலை
2. துவரை
3. எலுமிச்சை
4. கொய்யா
5. மா
6. சின்ன வெங்காயம்
புரட்டாசி :
1. பாசிப்பயறு
2. பனங்கிழங்கு
3. உளுந்து
4. எலுமிச்சை
5. கொய்யா
6. கொடுக்காப்புளி
7. நாவல்
8. முல்லைப் பூ
9. சின்ன வெங்காயம்
10. மொச்சை
11. கொண்டைக்கடலை
12. மா
13. புளி
14. வெற்றிலை
15. குண்டு மிளகாய்
16. களாக்காய்
17. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
18. முல்லை
ஐப்பசி:
1. நாட்டுக்கம்பு
2. குதிரைவாலி
3. கேழ்வரகு
4. கறுப்புக்கொள்ளு
5. பனங்கிழங்கு
6. முருங்கை
7. ஓமம்
8. மல்லி
9. குண்டு மிளகாய்
10. நிலக்கடலை
11. எலுமிச்சை
12. ரஸ்தாளி வாழை
13. கொடுக்காப்புளி
14. நாவல்
15. சின்ன வெங்காயம்
16. எள்
17. மா
18. களாக்காய்
19. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
20. முல்லை
கார்த்திகை :
1. எள்
2. தினை
3. கொண்டைக்கடலை
4. செடிமுருங்கை
5. ஓமம்
6. குண்டுமல்லி
7. சூரியகாந்தி
8. எலுமிச்சை
9. நிலக்கடலை
10. மரவள்ளி
11. அறுபதாம் குறுவை
12. கருத்தக்கார்
13. கொள்ளு
14. ரஸ்தாளி வாழை
15. தர்பூசணி
16. நாடன் வாழை
17. பப்பாளி
18. கத்திரி
19. மா
20. பட்டன் ரோஜா
21. சின்ன வெங்காயம்
22. கறுப்புக் கொள்ளு
23. புதினா
24. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
25. கற்பூரவல்லி வாழை
26. முல்லை
மார்கழி :
1. எள்
2. பனிவரகு
3. கத்திரி
4. தென்னை
5. உளுந்து
6. தர்பூசணி
7. சின்ன வெங்காயம்
8. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
9. கற்பூரவல்லி வாழை
10. முல்லை
தை :
1. தினை
2. செடிமுருங்கை
3. உளுந்து
4. நாட்டுக்கம்பு
5. கொய்யா
6. தர்பூசணி
7. சின்ன வெங்காயம்
8. பாகல்
9. பீர்க்கன்
10. புடலை
11. சேப்பங்கிழங்கு
12. கற்பூரவல்லி வாழை
மாசி:
1. பாசிப்பயறு
2. எள்
3. முலாம்பழம்
4. ரஸ்தாளி வாழை
5. பேயன் வாழை
6. கொய்யா
7. தர்பூசணி
பங்குனி:
1. முலாம்பழம்
ஆண்டு முழுவதும்
1. கீரை
2. செண்டுமல்லி
3. பாகற்காய்
4. வெள்ளரி
5. பப்பாளி
6. தக்காளி
7. உளுந்து
8. வெண்டை
9. கொத்தவரை
10. செடி அவரை
2
1 Share
Like
Comment
Share