Monday 30 July 2018

உயிர் உரங்கள்

அசோஸ்பைரில்லம் என்றால் என்ன?
அசோஸ்பைரில்லம் என்பது ஒரு உயிர் உரம் இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிறகித்து பயிருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை கிடைக்க செய்யும். பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது.
அசோஸ்பைரில்லத்தை எதுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
அசோஸ்பைரில்லத்தை அனைத்துவகை பயிர்வகை பயிர்களை தவிர மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்
அசோஸ்பைரில்லத்தை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா?
பயிர்களின் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது
இரசாயண உரத்தின் அளவு 25 சதம் குறைக்கிறது.
மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது
விதை முளைப்புதறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.
அசோஸ்பைரில்லம் - தழைச்சத்து:
ஒரு நுண்ணுயிர் உரம், வேரின் பக்கத்தில் இருக்கும் வேரின் பக்கத்தில் இருந்து கொண்டு வேரிலிருந்து வெளி வரும் கழிவுகளை உணவாக உட்கொள்ளும்.
அசோஸ்பைரில்லம் - நுண்ணுயிர் எல்லாமே அமோனியம் வடிவில் மட்டும்தான் பயிர் எடுத்துக்கொள்ளும். நைட்ரஜன் வடிவில் எடுக்காது
விதை நேர்த்தி செய்ய 200 கிராம் அசோஸ்பைரில்லத்தை ஆரிய அரிசி வடிகஞ்சி 250 மில்லியில் கலந்து அவற்றை 1 கிலோ விதையில் ஊற்றி பிசைந்து நிழலில் உலர்த்தி 24மணி நேரத்திற்குள் விதைத்து விடவேண்டும்
நாற்று நேர்த்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் என்ற விகிதத்தில் கலந்து நாற்று நேர்த்தி செய்யலாம். தண்ணீர் பாயும்பொழுது ஊற்றி விடலாம்
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோவை 100 கிலோ மக்கிய தொழுவுரத்தில் கலந்து காற்றுபுகாமல் 5 நாட்கள் வைத்திருந்து பிறகு எடுத்துப் போடலாம்.
பாஸ்போ பாக்டீரியா என்றால் என்னனு பார்க்கலாமா?
பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இது மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது அனைத்துவகை பயிர்களுக்கும்; பயன்படுத்தலாம்
பாஸ்போபாக்டீரியாவை எந்நெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
விதை நேர்த்தி செய்யலாம், நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடலாம், அடியுரமாக போடலாம்,
பாஸ்போபாக்டீரியாவை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்கலாமா?
பாஸ்போபாக்டீரியா 20 கிராம் ஒரு கிலோ விதையுடன் நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யவும்.
பாஸ்போபாக்டீரியாவை அடியுரமாக எப்படி கொடுக்கலாம் என்று பார்க்கலாமா?
பாஸ்போபாக்டீரியாவை 2 கிலோவை 100 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 5 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடிவைத்து பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும்பொழுது தூவிவிடலாம்.
பாஸ்போபாக்டீரியாவை நாற்றுக்களில் எவ்வாறு நனைத்து நடவு செய்யலாம் என்று பார்க்கலாமா?
பாஸ்போபாக்டீரியா அரைக் கிலோவை 15 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து விடவும் பிறகு நாற்று, கிழங்கு வகைகளை நனைத்து நடவு செய்யலாம்.
பாஸ்போ பாக்டீரியா – மணிச்சத்து
அடியுரமாகத்தான் மணிச்சத்து உரத்தை போடவேண்டும். அப்போதுதான் பயிர் எடுத்துக் கொள்ளும். மணிச்சத்து உரத்தை தாமதமாக போட்டால் பயிர் எடுத்துக் கொள்ளாது
விதைநேர்த்தி செய்யும் போது இதனைப் பயன்படுத்தலாம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர்கள் எல்லாமே பாஸ்பரஸ் வடிவில் மட்டுமே பயிர் எடுத்துக்கொள்ளும் அவை திடப்பொருளாக இருப்பதால் பாஸ்பேட் வடிவில் எடுத்துக் கொள்ளாது.
மகசூல் 20 முதல் 25 சதவீதம் மகசூல் கூடும்.
இரசாயன உரச்செலவு 25 சதவீதம் குறையும்
மண்வளம் கூடும்.
பயிர்கள் ஒரளவு வறட்சியை தாங்கி வளரும்,
விதையில் முளைப்புத்திறனை அதிகரிக்கச் செய்யும்
அசோஸ்பைரில்லம் பயன்படுத்தும் அளவு
இவற்றையும் பயன்படுத்த வேண்டும்.
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்றால் என்ன என்று பார்க்கலாமா?
காய்ப்புழுவிற்கு டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்பது இது ஒரு குளவி இனத்தை சேர்ந்தது தீமை செய்யும் பூச்சியின் முட்டைக் கருவை தின்று இறுதியில் கொன்று விடும். தீமை செய்யும் பூச்சிகளை முட்டை பருவத்திலே அழிப்பதால் பயிர்களில் சேதம் ஏற்படுவதில்லை
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை நெல், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் மற்றும் பயிர்வகைகள் மானாவாரி பயிர்களில் பயன்படுத்தலாம்
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி எந்தெந்த புழுக்களின் முட்டைகளை கட்டுப்படுத்துகிறது என்று தெரிந்து கொள்வோமோ?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுபுழு மற்றும் காய்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைபருவத்தை கட்டுப்படுத்துகிறது
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி பர்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பானது,எளியமுறைகளில் கையாளலாம், ரசாயணப்பூச்சி கொல்லிகளின் உபயோகம் 35 சதம்வரை குறையும்.
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி ஓரு ஏக்கருக்கு 5 மில்லி அட்டை பயன்படுத்தலாம். 1 மில்லி அட்டையிலிருந்து சுமார் 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் குளவிகள் வரை பொரித்து வெளிவரும்.அட்டை துண்டுகளை நூலினால் செடியின் இலையோடு கட்ட வேண்டும்.
பெசிலியோமைசிஸ் என்பது என்னவென்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் என்பது பயிர்களில் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணமாகும்.
பெசிலியோமைசிஸை எந்தெந்த பயிர்களில் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோமா?
பெசிலியோமைசிஸை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பெசிலியோமைசிஸை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
பெசிலியோமைசிஸை விதைநேர்த்தி செய்யலாம், அடியுரமாக போடலாம், நாற்று, கிழுங்கு நேர்த்தி செய்யலாம், வேரிமூலம் ஊற்றலாம்
பெசிலியோமைசிஸை எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவுடரை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லி;யுடன் கலந்து விதைநேர்த்தி செய்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்.
பெசிலியோமைசிஸை அடியுரமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் 2 முதல் 3 கிலோ பவுடரை 100 கிலோ இயற்கை உரத்துடன் ( சாண உரம்) கலந்து 10 முதல் 15 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடி வைத்து பிறகு அடியுரமாக இடலாம்.
பெசிலியோ மைசிஸ்
ஒரு கிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கலந்து வேர்பகுதியில் ஊற்றி விடலாம்
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அளவு கலந்து விதைநேர்த்தி செய்யலாம்
கிழங்கு, நாற்று நேர்த்தி செய்ய 10 கிராம் பெசிலியோமைசிஸ், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து நனைத்து நடவு செய்யலாம்.
அடியுரமாக 100 கிலோ மக்கிய தொழுவுரத்தி 2கிலோவை கலந்து நிழலில் வைத்திருந்து பிறகு எடுத்து பயன்படுத்தலாம்
பயிருக்கு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும்.
இதனோடு வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து போடலாம்.
மேலும் நாம் பசுந்தால் உரப்பயிர்கள்( சணப்பு, தக்கப்பூண்டு, முதலியவற்றை விதைத்து அவை பூ எடுக்கும் சமையத்தில் ரொட்டாவேட்டர் விட்டு துகள்களாக வெட்டிவிட்டால் விரைவில் மக்கிவிடும் தழைச்சத்து உரமாக பயன்படுத்தலாம்
நிலத்தில்ஆட்களைவிட்டு எருக்கஇலை, கொளுஞ்சி, ஆவராம் இலைகளை கொண்டுவந்து தொழுவுரத்துடன் கலந்து தண்ணீர் விட்டு நன்றாக மக்கவிட்டு வயலில் எடுத்து போட்டு நன்றாக உழவு செய்ய வேண்டும். சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.