Tuesday 11 December 2018

தென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி?

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள்
தென்னையில் நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்குநடவு செய்தது முதல் ஒரு வருடத்திற்கு தொழுஉரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோ இட வேண்டும். 2 வருட கன்றுக்கு தொழுஉரம் 20 கிலோ, யூரியா 650கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும் என வேளாண்துறை பரிந்துரைப்படி 5 வருடங்கள் வரை உரமிட வேண்டும்.
வீரிய ஒட்டு (நெட்டை மற்றும் குட்டை ) ரக தென்னைகளுக்கு ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 500 கிராம், சூப்பர் 375 கிராம், பொட்டாஷ் 750 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோவும், இரண்டு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 30கிலோ, யூரியா 1கிலோ, சூப்பர் 750கிராம், பொட்டாஷ் 1.500கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும் என மூன்று வருட, நான்கு வருட, ஐந்து வருட கன்றுகளுக்கு வேளாண்துறை பரிந்துரைப்படி உரம் இட வேண்டும். மேற்கண்ட உர பரிந்துரை அளவினை சம பங்காக பிரித்து வருடத்தில் இரு முறை இட வேண்டும்.
அதாவது மார்கழி, தை மாதங்களில் ஒரு முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும். மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண் சத்து உரத்தை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இவ்வகை உரங்களை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறிவிட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுகாய்கள் ஆகிய பிரச்சனைகள் குறைந்து ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை கண்டிப்பாக மகசூல் எடுக்க முடியும்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி.

Friday 7 December 2018

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
39. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. *குள்ளகாற் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

Saturday 3 November 2018

கத்திரி... காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்!

கத்திரிக்காய்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்துச் சொன்ன தகவல்கள் கடந்த இதழில் இடம்பிடித்திருந்தன. அதன் தொடர்ச்சி இங்கே...
பூச்சி, நோய் மேலாண்மை :
“காய்கறிப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது கத்திரிச்செடிகள்தான். குறிப்பாக, புழுத்தாக்குதல் அதிகளவில் உள்ள பயிர் இது. தண்டு மற்றும் காய்களைத் துளைக்கும் புழுக்களால், அதிகளவில் சொத்தைக் காய்கள் உண்டாகும். இதில் ஒரே வகைப்புழுக்கள்தான் தண்டு மற்றும் காய்கள் இரண்டிலுமே சேதத்தை உண்டாக்குகின்றன. இவைதான் கத்திரிக்காய் விவசாயிகளின் வில்லன். இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சேதத்தைத் தவிர்க்க முடியாது.
இயற்கை விவசாயத்தில் எப்போதுமே ‘வருமுன் காப்போம்’ என்பதுதான் சிறந்தது. கத்திரி நாற்றுகளை நடவு செய்த முதல் நாளிலிருந்து 20-ம் நாள் வரையான காலகட்டம் மிகவும் முக்கியமானது. விவசாயிகள் அதிக விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் இது. இக்காலத்தில் ஒவ்வொரு செடியிலும் இரண்டு மூன்று கிளைகள் விட்டிருக்கும். அவற்றில் முதன்முதலில் வெளியே வந்த கிளையின் தண்டு மற்ற கிளைகளைவிடச் சற்றுத் தடிமனாக இருக்கும். இந்தச் சமயத்தில்தான் தாய் அந்துப்பூச்சிகள் செடிகளைத் தேடிவரும். இந்த அந்துப்பூச்சிகள், தடிமனான தண்டிலிருந்து கிளை பிரியும் இடத்தில் முட்டை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்தான் தண்டைத்துளைத்து உள்ளே சென்று சேதத்தை உண்டாக்குகின்றன. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக முட்டை இடுவதைத் தடுத்துவிட்டால் போதும். அதன் பிறகு கத்திரிக்காய்ச் சாகுபடியில் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது.
தாய் அந்துப்பூச்சி, ஒரு கணுவில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் அடுத்த ஐந்து நாள்களில் பொரியும். அப்போது முட்டையிலிருந்து வெளியே வரும் புழுக்கள், தண்டைத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிடும். புழுக்கள், பதினைந்து நாள்கள் வரை (புழுப்பருவம் முடியும் வரை) தண்டுக்குள் இருந்து சதைப்பகுதி முழுவதையும் உண்டு முடித்தவுடன்... தண்டு உடைந்து விழுந்துவிடும். உடைந்த பகுதியின் வழியாக வெளிவரும் புழுக்கள் மண்ணுக்கு வந்தவுடன் கூட்டுப்புழுப் பருவம் தொடங்கும். மண்ணில் ஏழு நாள்கள் கூட்டுப்புழு பருவத்தில் இருந்தபிறகு, அந்துப்பூச்சியாக மாறிவிடும்.
இந்தத் தண்டுத் துளைப்பான் புழுக்கள், தண்டுக்குள் போன பிறகு அவற்றை ஒன்றுமே செய்ய முடியாது. எந்த வகையான பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தாலும் பயன் இருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான் சிறந்த பலன் கொடுக்கும். நாற்று நடவு செய்த 15 முதல் 20 நாள்களில்தான் தாய் அந்துப்பூச்சிகள் வரத்துவங்கும். இதே தாய் அந்துப்பூச்சிகள், பூக்களில் முட்டையிட்டால், சொத்தைக்காய்தான் காய்க்கும். தாய் அந்துப்பூச்சிகள் முட்டையிட்டிருப்பதை உடனே அறிந்துகொள்ள முடியாது. 50-ம் நாளுக்குமேல், காய் வரும்போதுதான் தாக்குதல் ஏற்பட்டதை அறிந்துகொள்ள முடியும். நடவு செய்த 20-ம் நாள்... ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று மில்லி வேப்பெண்ணெய் மருந்தைக் கலந்து தெளித்துவிட்டால், செடிகளைத் தேடி வரும் தாய் அந்துப்பூச்சிகள் ஓடிவிடும்.
ஒரு தாய் அந்துப்பூச்சி தனது வாழ்நாளில் 250 முட்டைகள் வரை இடும். கத்திரியில் ஏற்படும் சேதாரங்களில் 60 முதல் 70 சதவிகிதம் இந்தப் புழுக்களால் மட்டுமே ஏற்படுகிறது. இதற்கு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் தீர்வே கிடையாது. பல்வேறு பெயர்களில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் கிடைத்தாலும், அவற்றால் செலவு அதிகரிக்குமே தவிர, ஒரு பயனும் கிடைக்காது என்பதுதான் உண்மை.
நாற்று நடவு செய்த 20-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை வேப்பெண்ணெய் மருந்தைக் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்த கரைசல்) கடைசி அறுவடை வரை தெளித்து வருவதுதான் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் புழுக்களைத்தடுக்க ஒரேவழி. அதேபோலப் பயிர்சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியம். ஒருமுறை கத்திரி போட்டு அறுவடை முடிந்த வயலில், அடுத்த பயிராகக் கத்திரியை நடவு செய்யக்கூடாது. வேறு பயிரைத்தான் சாகுபடி செய்ய வேண்டும்.
தண்டு மற்றும் காய்ப்புழுத் தாக்குதலைச் சமாளித்து வளரும் இரண்டு சிறப்புக் கத்திரி ரகங்கள் உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ‘பூசா பர்ப்பில்’ மற்றும் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘பஞ்சாப் நீலம்’ ஆகிய கத்திரி ரகங்கள் தண்டு மற்றும் காய்ப்புழுத் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவை. இவற்றைப் பயிரிட்டால் தண்டு மற்றும் காய்ப்புழுத் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
‘டிரைக்கோ கிரம்மா பைலோனிஸ்’ எனும் எதிர் உயிரியின் மூலமும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டேர் பரப்புக்குப் பத்து முதல் பதினைந்து லட்சம் என்ற எண்ணிக்கையில், இந்த எதிர் உயிரி அட்டையை ஆங்காங்கு வைக்கவேண்டும். ஓர் அட்டையிலேயே லட்சக்கணக்கான உயிரிகள் இருக்கும். இந்த எதிர் உயிரிகள், தாய் அந்துப்பூச்சிகள் இடும் முட்டைகளை உண்டுவிடும். நடவு செய்த 20-ம் நாளிலிருந்து அறுவடை முடியும் வரை, இந்த அட்டையை வைத்திருக்க வேண்டும். இந்த எதிர் உயிரிகள், ஊதியமில்லா ஊழியனாக இருந்து காய்ப்புழுக்களின் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்கும்.
ஒரு ஹெக்டேர் பரப்புக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்தும் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம். விளக்குப்பொறிகள் பயன்படுத்தும்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்குகளை எரியவிடவேண்டும். இந்த நேரம்தான் அந்துப்பூச்சிகள் நடமாடும் நேரம். விடிய விடிய விளக்குகளை எரியவிட்டால், பல நன்மை செய்யும் பூச்சிகளும் பொறியில் சிக்கி இறந்துவிடும்.
புள்ளி வண்டு :
காய்ப்புழுக்களுக்கு அடுத்து கத்திரியைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகள் புள்ளி வண்டு மற்றும் சாம்பல் கூண்வண்டு ஆகியவைதான். புள்ளி வண்டு, இலையில் இருக்கக்கூடிய பச்சையம் முழுவதையும் சுரண்டிவிடும். அதனால், இலை சல்லடைபோல மாறிவிடும். செடியை லேசாக உலுக்கினால் இந்த வண்டுகள் கீழே உதிரும். அவற்றை மிதித்துக் கொன்றுவிடலாம். ஒரு ஏக்கருக்கு 12 கிலோ அடுப்புச் சாம்பலை மணலோடு கலந்து இலைகளில் தூவிவிட்டும், இந்த வண்டுகளை அழிக்கலாம். இலையில் உள்ள பச்சையத்தைப் புள்ளி வண்டுகள் சுரண்டி உண்ணும்போது, இலைகள்மீது படிந்துள்ள சாம்பலும் உள்ளே போகும். அப்போது சாம்பலில் உள்ள சிலிக்கான் எனும் பொருளால், வண்டுகளின் அரவைப் பல் நொறுங்கிப்போவதால், அவை இலையைச் சுரண்டுவதை நிறுத்திவிடும்.
சாம்பல் கூண் வண்டு :
சாம்பல் கூண் வண்டு, இலையின் விளிம்புப் பகுதியைக் கடித்து உண்ணும். கடைசி உழவுக்கு முன் வேப்பம் பிண்ணாக்கை ஒரு ஹெக்டேர் பரப்புக்கு 500 கிலோ தூவி உழவு செய்தாலே, இந்த வண்டுத் தாக்குதல் இருக்காது. மேலும், கத்திரியில், பச்சை தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதலும் பரவலாக இருக்கும். 40 மில்லி மீன் அமினோ அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து, இவற்றைக் கட்டுப்படுத்தலாம். கத்திரியில் வரும் மாவுப்பூச்சி மிகவும் கொடூரமானது. இது மீன் அமினோ அமிலத்துக்குக் கட்டுப்படா விட்டால், ‘வெர்டிசீலியம் லக்கானி’ என்ற பூஞ்சணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் எனக் கலந்து தெளிக்க வேண்டும்.
அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டம் இருந்தால், இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். ஒரு கிலோ பூண்டை ஒரு லிட்டர் மண்ணெண்ணெயில் 12 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் தலா அரைக்கிலோ அளவு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைத் தனித்தனியாக அரைத்து, பிறகு இரண்டையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு காடாத்துணியில் போட்டு கட்டி, ஆறு லிட்டர் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் இட வேண்டும். இக்கரைசல் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரில் இறங்கும். இதுதான் இஞ்சி பூண்டு கரைசல். தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து 500 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை இக்கரைசலை எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். செடியில் கரைசல் ஒட்டுவதற்காகக் கொஞ்சம் காதிசோப் சேர்த்துக்கொள்ள வேண்டும். கத்திரிக்காய் நடவு செய்யும் வயலைச் சுற்றி ஆமணக்கை நடவு செய்வது, ஆங்காங்கே பறவை தாங்கிகள் அமைப்பது, மஞ்சள் வண்ணப் பூக்கள் பூக்கும் செடிகளை நடவு செய்வது போன்றவை மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
நோய்கள் :
கத்திரியை வாடல் நோயும் அதிகளவில் தாக்கும். இந்நோய் தாக்கிய செடிகளின் இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும். இலையில் சில புள்ளிகள் தென்படும். தொடர்ந்து, தண்டிலிருந்து ஒரு திரவம் வடியும். நடவுக்கு முன்பாக சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைத் தொழுவுரத்துடன் கலந்து மண்ணில்போட்டால், வாடல் நோய் வரவே வராது. இந்த உயிர் உரங்களைச் சரியாகக் கொடுக்காமல் விட்டு, வாடல் நோய் தாக்கினால்... ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு சூடோமோனஸ் (திரவ வடிவிலானது) என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். குளிர் காலத்தில் காலிஃபிளவர், முட்டைகோஸ் ஆகியவற்றைச் சாகுபடி செய்த பிறகு, அதே வயலில் அடுத்த பயிராகக் கத்திரிக்காய்ச் சாகுபடி செய்தால் வாடல் நோய் வராது. வயலில் தண்ணீர் அதிகமாக இருந்தால் கழுத்து அழுகல் நோய் வரும். போதுமான அளவுக்கு மட்டுமே பாசனம் செய்தால் இந்நோயைத் தவிர்த்துவிடலாம். இந்நோய் தாக்கினால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு சூடோமோனஸ் (திரவ வடிவிலானது) என்ற விகிதத்தில் கலந்து, செடிகளின் தூர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
நடவு செய்த 28-ம் நாளில் முதல் பூவெடுக்கும். 35-ம் நாளில் 25 சதவிகிதம் பூக்கள் எடுக்கும். 50-ம் நாளில் 100 சதவிகிதம் பூத்துவிடும். 50 முதல் 60 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். நாட்டு ரகங்களாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் முதல் 30 டன் அளவு மொத்த மகசூல் கிடைக்கும். வீரிய ரகங்களில் 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ கத்திரிக்காய் குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேற்சொன்ன பராமரிப்பு முறைகளையும் தொழில்நுட்பங்களையும் முறையாகப் பின்பற்றினால், கத்திரிக்காய்ச் சாகுபடியில் நிச்சயம் நல்ல மகசூல் எடுக்கலாம்” என்ற தகவலைச் சொல்லி முடித்தார், பேராசிரியர் செந்தூர்குமரன்.
புற்றுநோயைத் தடுக்கும்!
கத்திரிக்காயை ‘எக் பிளான்ட்’ (Egg Plant) என்கிறார்கள், ஐரோப்பியர்கள். கூஸ் வாத்துக்குக் கண், காது வைத்தால் எப்படி இருக்குமோ அதேபோல் கத்திரிக்காயின் தோற்றம் இருப்பதால் இதை எக் பிளான்ட் என அழைக்கிறார்கள். கத்திரிக்காய்ச் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்றாலும், இதில் நம் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இருக்கின்றன.
இதன் விதையோடு கூடிய சதைப்பகுதியில் ‘ஆன்தோ சையானின்’ (Antho cyanin) மற்றும் ‘ஃபிளேவோனாய்ட்ஸ்’ (Flavonoids) என்ற இரண்டாம்நிலை வேதிக்கூறுகள் இருக்கின்றன. இவை, நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவை. கத்திரிக்காயின் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்துகள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் ஆகியவை இருக்கின்றன.
மனித உடலில் புற்றுநோய் பெருக காரணமாக இருக்கும் ‘ஃபிரீ ரேடிக்கிள்’ (Free radicle) என்ற திசுக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கத்திரிக்காயில் உள்ள ‘பினோலிக் அமில’த்தில் (Phenolic Acid) இருக்கிறது. இதே பினோலிக் அமிலம், அனைத்து விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்தாலும்... கத்திரிக்காய் தவிர்த்து மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள அமிலத்துக்குப் புற்றுநோய்க் கிருமிகள் தொற்றாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் மட்டுமே உண்டு.
ஆனால், புற்றுநோய் தாக்கிய பிறகும், புற்றுநோய்க்கிருமிகளைப் பரவாமல் தடுக்கக்கூடிய ஆற்றல், கத்திரிக்காயில் உள்ள பினோலிக் அமிலத்துக்கு உண்டு.
இக்காயின் முக்கியமான குணாதிசயம் இது. கத்திரிக்காயில் உள்ள ‘அன்தோனாசைனின்’ (Antho nasynin) என்ற பொருள் சீரான ரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது. தொடர்ந்து கத்திரிக்காய் சாப்பிட்டுவந்தால் காய்ச்சல் வராது.
தொடர்புக்கு :
பேராசிரியர் செந்தூர்குமரன்,
செல்போன்: 94438 69408

Monday 20 August 2018

ஒரு பசுவின் சாபம்

புணர்வதற்குக் காளை தேவை...!
உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.
நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது. இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என்போன்ற மாடுகளும் இருக்கிறோம்.
பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.
சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள். காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.
காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள். மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.
மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள். காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள். ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது.
அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்குறி, பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.
எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள்.
ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது. காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு.
பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம். அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே. சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.
புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில். அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது. இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.
எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை. எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.
பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம். இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.
ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை.
பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.
உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.
காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.
ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன. ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.
உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?
இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும். நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்துகொண்டுள்ளது.
என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார். என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.
என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.
இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும்.
உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.
புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள். உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்.
எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’
இப்போதும் அனுபவித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள். படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.
இப்போதும் உங்களால் மாற முடியும். மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள். பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.
உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.
நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்? எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். கேவலம், நாங்கள் மாடுகள்தானே!
(இந்த பசுவின் கேள்வி நியாயம்தானே ? )...

Wednesday 8 August 2018

வாழை



பழுக்காத வாழை லையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும்.
விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும்.
இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே.
25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும்.
இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம்.
அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும்.
கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின் நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும்.
கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும்.
வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ 1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும்.
செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும்.
சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தடுக்கும்.
வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும். நன்றி🙏

Monday 30 July 2018

உயிர் உரங்கள்

அசோஸ்பைரில்லம் என்றால் என்ன?
அசோஸ்பைரில்லம் என்பது ஒரு உயிர் உரம் இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிறகித்து பயிருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை கிடைக்க செய்யும். பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது.
அசோஸ்பைரில்லத்தை எதுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
அசோஸ்பைரில்லத்தை அனைத்துவகை பயிர்வகை பயிர்களை தவிர மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்
அசோஸ்பைரில்லத்தை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா?
பயிர்களின் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது
இரசாயண உரத்தின் அளவு 25 சதம் குறைக்கிறது.
மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது
விதை முளைப்புதறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.
அசோஸ்பைரில்லம் - தழைச்சத்து:
ஒரு நுண்ணுயிர் உரம், வேரின் பக்கத்தில் இருக்கும் வேரின் பக்கத்தில் இருந்து கொண்டு வேரிலிருந்து வெளி வரும் கழிவுகளை உணவாக உட்கொள்ளும்.
அசோஸ்பைரில்லம் - நுண்ணுயிர் எல்லாமே அமோனியம் வடிவில் மட்டும்தான் பயிர் எடுத்துக்கொள்ளும். நைட்ரஜன் வடிவில் எடுக்காது
விதை நேர்த்தி செய்ய 200 கிராம் அசோஸ்பைரில்லத்தை ஆரிய அரிசி வடிகஞ்சி 250 மில்லியில் கலந்து அவற்றை 1 கிலோ விதையில் ஊற்றி பிசைந்து நிழலில் உலர்த்தி 24மணி நேரத்திற்குள் விதைத்து விடவேண்டும்
நாற்று நேர்த்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் என்ற விகிதத்தில் கலந்து நாற்று நேர்த்தி செய்யலாம். தண்ணீர் பாயும்பொழுது ஊற்றி விடலாம்
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோவை 100 கிலோ மக்கிய தொழுவுரத்தில் கலந்து காற்றுபுகாமல் 5 நாட்கள் வைத்திருந்து பிறகு எடுத்துப் போடலாம்.
பாஸ்போ பாக்டீரியா என்றால் என்னனு பார்க்கலாமா?
பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இது மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது அனைத்துவகை பயிர்களுக்கும்; பயன்படுத்தலாம்
பாஸ்போபாக்டீரியாவை எந்நெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
விதை நேர்த்தி செய்யலாம், நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடலாம், அடியுரமாக போடலாம்,
பாஸ்போபாக்டீரியாவை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்கலாமா?
பாஸ்போபாக்டீரியா 20 கிராம் ஒரு கிலோ விதையுடன் நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யவும்.
பாஸ்போபாக்டீரியாவை அடியுரமாக எப்படி கொடுக்கலாம் என்று பார்க்கலாமா?
பாஸ்போபாக்டீரியாவை 2 கிலோவை 100 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 5 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடிவைத்து பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும்பொழுது தூவிவிடலாம்.
பாஸ்போபாக்டீரியாவை நாற்றுக்களில் எவ்வாறு நனைத்து நடவு செய்யலாம் என்று பார்க்கலாமா?
பாஸ்போபாக்டீரியா அரைக் கிலோவை 15 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து விடவும் பிறகு நாற்று, கிழங்கு வகைகளை நனைத்து நடவு செய்யலாம்.
பாஸ்போ பாக்டீரியா – மணிச்சத்து
அடியுரமாகத்தான் மணிச்சத்து உரத்தை போடவேண்டும். அப்போதுதான் பயிர் எடுத்துக் கொள்ளும். மணிச்சத்து உரத்தை தாமதமாக போட்டால் பயிர் எடுத்துக் கொள்ளாது
விதைநேர்த்தி செய்யும் போது இதனைப் பயன்படுத்தலாம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர்கள் எல்லாமே பாஸ்பரஸ் வடிவில் மட்டுமே பயிர் எடுத்துக்கொள்ளும் அவை திடப்பொருளாக இருப்பதால் பாஸ்பேட் வடிவில் எடுத்துக் கொள்ளாது.
மகசூல் 20 முதல் 25 சதவீதம் மகசூல் கூடும்.
இரசாயன உரச்செலவு 25 சதவீதம் குறையும்
மண்வளம் கூடும்.
பயிர்கள் ஒரளவு வறட்சியை தாங்கி வளரும்,
விதையில் முளைப்புத்திறனை அதிகரிக்கச் செய்யும்
அசோஸ்பைரில்லம் பயன்படுத்தும் அளவு
இவற்றையும் பயன்படுத்த வேண்டும்.
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்றால் என்ன என்று பார்க்கலாமா?
காய்ப்புழுவிற்கு டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்பது இது ஒரு குளவி இனத்தை சேர்ந்தது தீமை செய்யும் பூச்சியின் முட்டைக் கருவை தின்று இறுதியில் கொன்று விடும். தீமை செய்யும் பூச்சிகளை முட்டை பருவத்திலே அழிப்பதால் பயிர்களில் சேதம் ஏற்படுவதில்லை
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை நெல், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் மற்றும் பயிர்வகைகள் மானாவாரி பயிர்களில் பயன்படுத்தலாம்
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி எந்தெந்த புழுக்களின் முட்டைகளை கட்டுப்படுத்துகிறது என்று தெரிந்து கொள்வோமோ?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுபுழு மற்றும் காய்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைபருவத்தை கட்டுப்படுத்துகிறது
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி பர்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பானது,எளியமுறைகளில் கையாளலாம், ரசாயணப்பூச்சி கொல்லிகளின் உபயோகம் 35 சதம்வரை குறையும்.
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி ஓரு ஏக்கருக்கு 5 மில்லி அட்டை பயன்படுத்தலாம். 1 மில்லி அட்டையிலிருந்து சுமார் 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் குளவிகள் வரை பொரித்து வெளிவரும்.அட்டை துண்டுகளை நூலினால் செடியின் இலையோடு கட்ட வேண்டும்.
பெசிலியோமைசிஸ் என்பது என்னவென்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் என்பது பயிர்களில் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணமாகும்.
பெசிலியோமைசிஸை எந்தெந்த பயிர்களில் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோமா?
பெசிலியோமைசிஸை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பெசிலியோமைசிஸை பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
பெசிலியோமைசிஸை விதைநேர்த்தி செய்யலாம், அடியுரமாக போடலாம், நாற்று, கிழுங்கு நேர்த்தி செய்யலாம், வேரிமூலம் ஊற்றலாம்
பெசிலியோமைசிஸை எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவுடரை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லி;யுடன் கலந்து விதைநேர்த்தி செய்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்.
பெசிலியோமைசிஸை அடியுரமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
பெசிலியோமைசிஸ் 2 முதல் 3 கிலோ பவுடரை 100 கிலோ இயற்கை உரத்துடன் ( சாண உரம்) கலந்து 10 முதல் 15 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடி வைத்து பிறகு அடியுரமாக இடலாம்.
பெசிலியோ மைசிஸ்
ஒரு கிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கலந்து வேர்பகுதியில் ஊற்றி விடலாம்
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அளவு கலந்து விதைநேர்த்தி செய்யலாம்
கிழங்கு, நாற்று நேர்த்தி செய்ய 10 கிராம் பெசிலியோமைசிஸ், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து நனைத்து நடவு செய்யலாம்.
அடியுரமாக 100 கிலோ மக்கிய தொழுவுரத்தி 2கிலோவை கலந்து நிழலில் வைத்திருந்து பிறகு எடுத்து பயன்படுத்தலாம்
பயிருக்கு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும்.
இதனோடு வேப்பம் புண்ணாக்கும் சேர்த்து போடலாம்.
மேலும் நாம் பசுந்தால் உரப்பயிர்கள்( சணப்பு, தக்கப்பூண்டு, முதலியவற்றை விதைத்து அவை பூ எடுக்கும் சமையத்தில் ரொட்டாவேட்டர் விட்டு துகள்களாக வெட்டிவிட்டால் விரைவில் மக்கிவிடும் தழைச்சத்து உரமாக பயன்படுத்தலாம்
நிலத்தில்ஆட்களைவிட்டு எருக்கஇலை, கொளுஞ்சி, ஆவராம் இலைகளை கொண்டுவந்து தொழுவுரத்துடன் கலந்து தண்ணீர் விட்டு நன்றாக மக்கவிட்டு வயலில் எடுத்து போட்டு நன்றாக உழவு செய்ய வேண்டும். சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.

Monday 11 June 2018

சில புள்ளி விபரங்கள் - நமக்கு தெரிய வேண்டியது

தொழு எருவில் 1.24 விகித அளவு தழைச்சத்தும், 0.78 விகித அளவு மணிச்சத்தும், 2.08 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🍃 ஆட்டு எருவில் 2.17 விகித அளவு தழைச்சத்தும், 1.10 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🍃 கோழி எருவில் 5.00 விகித அளவு தழைச்சத்தும், 2.88 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🍃 பண்ணை எருவில் 1.25 விகித அளவு தழைச்சத்தும், 0.60 விகித அளவு மணிச்சத்தும், 1.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 மீன் தூளில் 6.80 விகித அளவு தழைச்சத்தும், 7.10 விகித அளவு மணிச்சத்தும், 1.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 சணப்பில் 2.30 விகித அளவு தழைச்சத்தும், 0.50 விகித அளவு மணிச்சத்தும், 1.80 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 பதப்படுத்தப்பட்ட எலும்பில் 3.40 விகித அளவு தழைச்சத்தும், 20.25 விகித அளவு மணிச்சத்தும் உள்ளது.
🌱 ஆட்டு எருவில் 2.17 விகித அளவு தழைச்சத்தும், 1.10 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது. கோம்பு, குளம்பு கழிவுகளில் 13.00 விகித அளவு தழைச்சத்து உள்ளது.
🌱 தக்கைப்பு ண்டில் 3.50 விகித அளவு தழைச்சத்தும், 0.60 விகித அளவு மணிச்சத்தும், 1.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 சீமை அகத்தியில் 2.71 விகித அளவு தழைச்சத்தும், 0.53 விகித அளவு மணிச்சத்தும், 2.20 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 புங்கம் இலையில் 3.31 விகித அளவு தழைச்சத்தும், 0.44 விகித அளவு மணிச்சத்தும், 2.39 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 கிளைரிசீடிரியாவில் 2.90 விகித அளவு தழைச்சத்தும், 0.50 விகித அளவு மணிச்சத்தும், 2.80 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 பயிறு வகைகளில் 0.72 விகித அளவு தழைச்சத்தும், 0.20 விகித அளவு மணிச்சத்தும், 0.53 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 கடலை புண்ணாக்கில் 7.60 விகித அளவு தழைச்சத்தும், 1.50 விகித அளவு மணிச்சத்தும், 1.30 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 வேப்பம் புண்ணாக்கில் 4.90 விகித அளவு தழைச்சத்தும், 1.70 விகித அளவு மணிச்சத்தும், 1.40 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 ஆமணக்கு புண்ணாக்கில் 5.30 விகித அளவு தழைச்சத்தும், 1.60 விகித அளவு மணிச்சத்தும், 1.40 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 தேங்காய் புண்ணாக்கில் 3.50 விகித அளவு தழைச்சத்தும், 1.50 விகித அளவு மணிச்சத்தும், 2.00 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 எள்ளு புண்ணாக்கில் 5.50விகித அளவு தழைச்சத்தும், 1.75 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.
🌱 பருத்தி புண்ணாக்கில் 5.00 விகித அளவு தழைச்சத்தும், 1.75 விகித அளவு மணிச்சத்தும், 1.50 விகித அளவு சாம்பல் சத்தும் உள்ளது.

Friday 11 May 2018

ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு முறை

ஒரு ஏக்கருக்கு தேவையான பொருட்கள்
நன்கு மக்கிய எரு - 600 கிலோ 
சூப்பர் பாஸ்பேட் - 100 கிலோ
வேப்பம் புண்ணாக்கு - 10 கிலோ
சூடாமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பெசிலியோமைசிஸ், வேம், பாஸ்போபாக்டீரியா போன்றவற்றில் ஒவ்வொன்றிலும் தலா ஒரு கிலோ.
செய்முறை
மக்கிய எருவுடன் சூப்பர் பாஸ்பேட் உரத்தை நன்கு கலந்து, பிறகு வேப்பம் புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு கிளறி விட வேண்டும். அதில் சிறிது நீர் தெளித்து நிழலான பகுதியில் மூடாக்கு போட்டு வைக்க வேண்டும்.
(குறிப்பு: ஊட்டமேற்றிய தொழு உரத்தின் ஈரப்பதம் புட்டு பதத்தில் இருக்க வேண்டும்.) சுமார் 10 முதல் 30 தினங்களுக்குப் பிறகு இதனை பிரித்து பயிருக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு ஊட்டமேற்றிய தொழு உரத்தினால் பயிறுக்குத் தேவையான மணிச்சத்து மற்றும் உயிர் உரங்களின் சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கிறது.
மணிச்சத்து உள்ள உரங்களை சாதாரணமாக பயன்படுத்தும்போது அதில் உள்ள மணிச்சத்தானது 10% மட்டுமே பயிருக்கு கிடைக்கும். மீதம் உள்ள மணிச்சத்து மண்ணிலேயே வீணாக படிந்து விடும்.
ஆனால் ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்துவதால் சுமார் 80% சத்துக்கள் பயிருக்கு கிடைக்கிறது. அங்கக அமிலங்களோடு மணிச்சத்து சேரும்போது அதில் கரையாத நிலையிலுள்ள மணிச்சத்து பயிர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.
விதை நேர்த்திசெய்ய
விதை நேர்த்தி செய்வதற்கு விதையுடன் டிரைக்கோடெர்மாவிரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை ஒரு கிலோ விதைக்கு 10முதல் 20 கிராமை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து சிறிது நேரம் நிழலில் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளின் முளைப்புத்திறன் 80% அதிகமாக இருப்பதோடு, நோய் தாக்காத தரமான நாற்றுகள் நமக்கு கிடைக்கும்.
உயிர் இடுபொருட்கள் வகைகள்:
அசோஸ்பைரில்லம்தழைச்சத்தை கொடுக்கும் உயிர் உரம்
பாஸ்போ பாக்டீரியா
மணிச்சத்தை கொடுக்கும் உயிர் உரம்
வேம்
நுண்ணூட்டச்சத்தை கொடுக்கும் உயிர்உரம்
டிரைக்கோடெர்மா விரிடி
உயிர் பூஞ்சானக்கொல்லி
சூடோமோனாஸ் புளோரசன்ஸ்
உயிர் பூஞ்சானக்கொல்லி
பெசிலியோமைசிஸ் லிலாசினஸ்
உயிர் நூற்புழுக்கொல்லி
பிவேரியா பேசியான
உயிர் பூச்சிகொல்லி
போன்ற இயற்கை உரம் மற்றும் ஊட்டமேற்றிய தொழுவுரங்களை பயன்படுத்தி செலவை குறைத்து அதிக மகசூல் எடுப்போம்

Monday 9 April 2018

12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையு குணப்படுத்தமுடியும்


Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*
*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்..